வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024

அய்யோ! வேணாம் மா.. ப்ளீஸ், விட்டுருங்க.. கெஞ்சிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ‘அமரன்’ படம் வெளியாகியுள்ளது.

இந்த படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

தற்போது இன்று ரிலீசாகி வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறது அமரன் படம். மேலும் விமர்சன ரீதியாக மக்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் முக ஸ்டாலின் கூட படத்தை பார்த்து அழுது இருக்கிறார்.

கெஞ்சிய சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், படத்தை முதல் கட்சியில் சிவகார்த்திகேயன் பார்த்து விட்டு வெளியே வந்தபோது, பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க அதற்க்கு சிவகார்த்திகேயன் பதில் சொல்லி வந்துள்ளார். இவரை பார்ப்பதற்காக அங்கு ரசிகர் பட்டாளம் கூடி இருந்தது.

இந்த நிலையில், கூட்டத்தில் ஒரு குரல், குட்டி தளபதி என்று அழைக்க, அங்கு அமைதியாக, எல்லோரும் யார் அது என்று திரும்பியுள்ளார். இதை பார்த்த சிவா பயந்து போயுள்ளார். ஐயோ வேணாம் மா.. ப்ளீஸ்.. அதெல்லாம் எப்போவுமே கிடையாது என்று கெஞ்சாத குரையாக கூறியுள்ளார்.

இந்த ரசிகர்களே போதும், ஒருவரின் வளர்ச்சியை முடித்து விட என்று தான் இதை பார்க்கும்போது தோன்றுகிறது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே, எப்போதும் நான் தளபதி ஆகமுடியாது என்று கூறி இருந்தார். இருப்பினும் இவரை அனைவரும் தற்போது குட்டி தளபதி என்று தான் அழைத்து வருகிறார்கள். காலம் தான் பதில் சொல்லும்.

- Advertisement -spot_img

Trending News