வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எப்படி இருந்த மஞ்சுமா, இப்படி ஆகிட்டாங்களே.. வருத்தப்பட வைக்கும் அவரது சினிமா கேரியர்

90களில் தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து, அதன் பிறகு கடந்த 2016ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இவர் நடித்த முதல் படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். அதன் காரணமாக இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் கிடைத்தது. பிறகு மஞ்சுமா மோகனுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

இதனால் கடுமையான முதுகு வலியில் அவதிப்பட்ட மஞ்சுமா, சில மாதங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அப்போது உடற்பயிற்சியில் கவனம் கொள்ளாமல் இருந்ததால் தற்போது உடல் எடை ஏறி கொழுகொழுவென்று மாறிவிட்டார். இவர் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப் ஐ ஆர் படத்தில் ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

manjima-cinemapettai
manjima-cinemapettai

அத்துடன் இந்தப் படத்தில் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவ்வாறு தான் நடித்திருக்கும் எஃப் ஐ ஆர் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யும் விழாவில் கலந்து கொண்ட மஞ்சிமா மோகனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஏனென்றால் இதில் மஞ்சுமா அங்கிருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உடல் எடை ஏறி இருக்கிறார்.

‘இதன்பிறகு அம்மா, அக்கா போன்ற ரோல்களில் மஞ்சுமா நடிக்க வேண்டியதுதான்’ என்றும் ‘என்னம்மா இப்படி ஊதி பெருத்து போயிட்டியே’ என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். அத்துடன் ஒரு சிலர் ‘இப்பவும் நீங்கள் அழகா இருக்கீங்க ஆனால் உங்களுடைய சினிமா தொழிலுக்கு ஒல்லியாக இருந்தால் மட்டுமே கதாநாயகியாக நடிக்க முடியும்’ என்றும் மஞ்சுமா மோகனுக்கு சோசியல் மீடியா அறிவுரை கூறுகின்றனர்.

actress-manjima-cinemapettai
actress-manjima-cinemapettai

இருப்பினும் சினிமா நடிகைகளுக்கு உடலை இளைப்பது அல்லது ஏற்றுவது எல்லாம் பெரிய விஷயமாக தெரியாது. அதற்கு சரியான ஆலோசனையின்படி உடற்பயிற்சியை மேற்கொண்டு ஈசியாக செய்து விடுவார்கள். அந்தவகையில் மஞ்சுமா மோகனும் கூடிய விரைவில் உடல் எடையைக் குறைத்து சிக்குனு சிறுத்தை குட்டியாக மாறிவிடுவார் அவருடைய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Trending News