செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மார்க்கெட் இழந்தும் அசால்ட் பண்ணும் 5 நடிகைகள்.. அந்த மாதிரி பிசினஸில் கல்லா கட்றாங்க!

நடிகைகள் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவதை தாண்டி அவர்களுக்கு இணையாக தொழில் செய்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிதான் 5 பிரபல நடிகைகள் சினிமாவில் மார்க்கத்தை இழந்தது பற்றி கவலைப்படாமல் ஹோட்டல், ரெஸ்டாரன்ட், எஸ்டேட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

திரிஷா: சினிமாவிற்கு என்ட்ரி கொடுப்பதற்கு முன்பு, 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதன் பிறகு தென்னிந்திய நடிகையாக ஒரு கலக்கு கலக்கினார். தமிழில் சாமி, கில்லி படத்தின் மூலம் எக்கச்சக்கமான தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.

அதன் பிறகு வரிசையாக நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்த திரிஷா, சினிமாவில் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காகவே 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இருப்பினும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்பு கிடைக்காததால் பெங்களூரில் ஹோட்டல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட்டில் தான் சம்பாதித்த பல கோடிகளை முதலீடு செய்துள்ளார்.

 ஷ்ரத்தா ஸ்ரீநாத்: இவன் தந்திரம், விக்ரம் வேதா போன்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன்பிறகு தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

பிறகு சக்ரா, மாறா என நடித்துக்கொண்டிருந்த இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் சாலட் பார் & கஃபே (salad bar & cafe) என்ற ரெஸ்டாரன்ட்டை நடத்தி வருகிறார்.

ஷில்பா ஷெட்டி: பாலிவுட்டில் பிரபல நடிகையான இவர், தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் விஜய் நடித்த குஷி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவருடைய கணவர் ராஜ் குந்த்ரா கடந்த வருடம் ஆபாச படங்களை தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் இதற்கும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் கணவரை அடியோடு நிராகரித்து, சினிமாவில் வழக்கம் போல் நடித்துக் கொண்டிருந்த ஷில்பா ஷெட்டி தொழிலிலும் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது மும்பையில் ராயலிட்டி கிளப் (royality club ) ஒன்று உள்ளது. அதை கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கி 12 வருடங்களாக சிறப்பாக நடத்தி வருகிறார்

பிரணிதா: கன்னட நடிகையான பிரணிதா 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து அதன்பிறகு மார்க்கெட்டை இழந்த இவர், பெங்களூரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது பிசினஸில் செய்து கொண்டிருக்கிறார்.

நடிகை பிரணிதா பெங்களூருவில் பூட்லெக்கர் (bootlegger) என்ற ஓர் நட்சத்திர ஹோட்டலில் பங்குதாரராக உள்ளார். விரைவில், இதன் கிளைகள் மற்ற முன்னணி நகரங்களிலும் திறக்க முயற்ச்சித்து வருகிறார்.

சிம்ரன்: 90 கிட்ஸ் களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த சிம்ரன், திருமணத்திற்குப் பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல், சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி திரைப்படத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்தார். இவர் சினிமாவில் மார்க்கெட் இழந்த சமயத்தில் பிஸினஸில் ஆர்வம் காட்டி, சென்னையில் கோட்கா பி சிம்ரன் (Godka By Simran) என்ற ரெஸ்டாரன்ட் ஒன்றை சென்னை ஈசிஆர் (ECR) இல் நடத்திவருகிறார்.

இவ்வாறு இந்த 5 பிரபல நடிகைகளும் சினிமாவில் வாய்ப்பு குறைவதை அறிந்ததும் தாங்கள் சம்பாதித்த பணத்தை வைத்து தொழில் செய்து அதில் சிறந்து விளங்குவது தற்போது அவர்களுடைய ரசிகர்களால் பாராட்டுகிறார்கள்.

Trending News