திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் அக்கட தேசம் சென்ற காந்த கண்ணழகி.. வெளிப்படையாக பேசிய விஷால் பட நடிகை

Tamil actress: சமீப காலமாகவே திரைத்துறையில் இருக்கும் நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதிலும் இளம் நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அந்த நடிகையை  பலரும் அழைத்து இருக்கின்றனர்.

அமெரிக்காவில் பிறந்த நடிகை அனு இம்மானுவேல், இந்தியாவில் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்ததால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி, அதன் பின் நிவின் பாலி கதாநாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூவின் முதல் முதலாக கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

Also Read: விஷால் என்னைய பரதேசினு தான் கூப்பிடுவாரு.. வெளிப்படையாக பேசிய வைரல் நடிகை

பின்பு இவர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் ஹீரோயின் ஆக நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமானார். இந்த படத்தில் காந்த கண்ணழகி பாடலுக்கு ஏற்றார் போல் லுக்கு விட்டு ரசிகர்களை திணறடித்தார்.

இந்த படத்திற்கு பிறகு அனு இம்மானுவேல் தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் தெலுங்கு பக்கம் சாய்ந்து விட்டார். ஏனென்றால் தமிழ் படங்கள் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அம்மணியை நிறைய பேர் டார்ச்சர் செய்ததால், தெலுங்கில் பட வாய்ப்புகளுக்கு குறைந்திருக்கிறது. அதனால் அந்த படங்களில் எல்லாம் வரிசையாக நடித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் சிக்கிடாதீங்க!

இந்த நிலையில் தான் அனு இம்மானுவேல் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதில் பல பேர் அவரை படுக்கைக்கு அழைத்தார்களாம். ஆனால் அதை எல்லாம் நினைத்து அவர் பயப்படாமல் குடும்பத்தினரின் துணையுடன் சமாளித்துள்ளார். இதுபோன்ற நேரத்தில் தனியாக பிரச்சனையை எதிர்கொள்வதை காட்டிலும் குடும்பத்தின் துணையுடன் எதிர்கொள்வது நல்லது.

ஏனென்றால் குடும்பத்தில் உள்ளவர்களால் மட்டுமே நமக்கு உதவ முடியும். பெண்கள் முன்னேற கூடாது என நினைக்கும் சில வக்கிர புத்தி உள்ளவர்களை பார்த்து பெண்கள் பயப்படாமல், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துணிச்சலுடன் முன்னேற வேண்டும் என்று அனு இம்மானுவேல் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read: சிவகார்த்திகேயனிடம் நண்பராக ஒட்டிக்கொண்ட 5 இயக்குனர்கள்.. ரஜினிக்கு செட்டே ஆகாத கேரக்டர்

Trending News