திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தனுஷிற்கு வரிசை கட்டி நிற்கும் படங்கள்.. அடுத்த 5 வருடத்திற்கு மனுஷன் ரொம்ப பிஸி

Actor Dhanush: வாத்தி படத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மேற்கொள்ளும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்பொழுது கைவசம் இத்தனை படங்களால் என வியக்க வைக்கும் அளவிற்கு அலப்பறை காட்டி வருகிறார்.

அவ்வாறு சன் பிக்சர்ஸ் வழங்கும் கலாநிதி மாறன் தயாரிப்பில் மேற்கொள்ளும் படம் தான் D50. எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அமலாபால் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்கள். கேங்ஸ்டர் படமாய் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை ஆதித்யா ராமில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: ஒரு வழியா வந்த விடிவு காலம்.. எஸ்.டி.ஆர் 48-க்கு அட்டகாசமாக தயாரான சிம்பு

அதைத்தொடர்ந்து தெலுங்கு படமான D-51ல் தனுஷ் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். அதன்பின் பாலிவுட்டிலும் களம் இறங்கும் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் என்னும் படத்தை மேற்கொள்கிறார். இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பை மேற்கொள்ளப் போகிறாராம்.

அதன் பின்பு கர்ணன் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து தனுஷ் படம் ஒன்று மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் உடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது.

Also Read: பழைய டாவை பார்த்ததும் மகுடிக்கு மயங்கிய பாம்பான நடிகர்.. பொண்டாட்டி ரேஞ்சுக்கு கோபப்பட்ட நடிகை

மேலும் ஹெச் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கான்மன் ஸ்டோரியை போன்று படம் மேற்கொள்ள போவதாகவும் கூறப்படுகிறது. அதை முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் பட்டைய கிளப்பிய வடசென்னை படத்தின் பாகம் 2வை மேற்கொள்ளப் போவதாகவும் திட்டம் தீட்டு உள்ளார்கள்.

அதன்பின் நெல்சன் இயக்கத்திலும் தனுஷ் படம் ஒன்று மேற்கொள்ளப் போவதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இதுபோன்று அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் தனுஷ் கைவசம் இத்தனை படங்களை வைத்து அலப்பறை மேற்கொள்வதாகவும், மேலும் அடுத்த 5 வருடத்திற்கு இவரின் கால்ஷீட் ரொம்ப டிமாண்டில் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் இடையே பேச்சு எழுந்துள்ளது.

Also Read: பெரிய தலைகளுக்கு கதை கூறிய எதிர்நீச்சல் பிரபலம்.. எந்த சீரியல் இயக்குனருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை!

Trending News