திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மனைவிக்காக தனி வீடு கட்டும் சிம்பு.. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஒரு அலப்பறையா.!

தனது திரையுலக வாழ்க்கையில் நீண்ட சர்ச்சைகளையும், தோல்விகளையும் சந்தித்து வந்தாலும் எல்லாவற்றிலிருந்தும் தன்னை மீட்டு கொள்கிறார் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதலே தமிழ் ரசிகர்களுக்கு எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் பிடித்தமான நடிகனாகவே இருக்கிறார் சிம்பு.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் தயாரிப்பாளருடன் சண்டை, உடல் எடை கூடி, ரெட் கார்ட் பெற்று இனி இவர் எவ்வாறு மீண்டு படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் காத்திருந்த போது அனைத்தையும் சரி செய்துக்கொண்டு மாநாடு படத்தில் மிக பெரும் வெற்றியை பெற்றார்.

அடுத்ததாக சுறுசுறுப்பாக கெளதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தொகுத்து வந்த பிக்பாஸ் தொடரில் இருந்து அவர் விலகவே சிம்பு தொகுப்பாளராக களம் இறங்கி அதிலும் சிக்சர் அடித்தார். அண்மையில் பிக்பாஸ் தொடர் முடிவடைந்தது.

சென்னையில் தனது பெற்றோருடன் டி நகரில் வசித்து வருகிறார் சிம்பு. பிக்பாஸ் தொடரிலும் நல்ல சம்பளம் அவர் பெற்றுள்ளார். மீண்டும் திரைத்துறையில் நல்ல சம்பாதித்து வரும் சிம்பு தற்போது ஈ.சி.ஆரில் ஒரு மிகப்பெரிய பங்களாவை கட்டி வருகிறார். பங்களாவை கட்டி முடித்த பின் சிம்புவிற்கு திருமணம் நடக்கும் என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா வட்டாரம் இன்றி அவருடைய ரசிகர்கள் தற்போது எதிர்பார்க்கும் ஒரே விஷயம் சிம்புவின் திருமணம். 39 வயதை எட்டியுள்ள இவருக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் இவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடிகைகளுடன் காதல் வயப்பட்டாலும் எதுவும் பெரிதாக கைக்கூடவில்லை. தற்போது அவருடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வாலுடன் மீண்டும் காதலில் உள்ளதாகவும் அவரை தான் சிம்பு மணக்கவுள்ளார் என தெரிகின்றன. அதிகாரபூர்வமாக ஏதும் வெளியாகவில்லை என்றாலும் தனது மனைவியுடன் தணித்து வாழவே ஈ.சி.ஆரில் வீடு கட்டி வருகிறாராம் சிம்பு. சிம்புவிற்கு பல காதல்கள் இருந்தாலும் இதுதான் அவர் காதலில் பெறவிருக்கும் முதல் வெற்றி.

Trending News