பணக்கார விளையாட்டுகளுள் ஒன்று கிரிக்கெட். ஆண்டுக்கு பல நூறு கோடிகள் புரளும் இடமாக திகழ்கிறது. அதில் முதன்மையில் இருக்கும் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். ஒரே ஒரு தொடரில் சிறந்து விளையாடினால் போதும் அந்த வீரரிடம் கோடிக்கணக்கில் பணம் புரளும்
இன்றைய நவீன காலகட்ட கிரிக்கெட் தொடர்களில் சிறந்து செயல்படும் வீரர்களுக்கு பரிசு பொருட்களை வாரி வழங்குவார்கள். அதிலும் குறிப்பாக எல்லாரையும் விட நம்பர் ஒன்னாக வருபவருக்கு “மேன் ஆஃப் தி சீரிஸ் “ ஆக தேர்ந்தெடுத்து அவருக்கு விலை உயர்ந்த கார் மற்றும் பைக்கை பரிசாக கொடுப்பார்கள்.
அப்படி இந்திய அணியில் முதல் முதலாக ஆடி கார் பரிசு வாங்கியது ஒரு நட்சத்திர ஆல் ரவுண்டர். “பென்சன் அண்ட் ஹட்ஜஸ்” உலக சாம்பியன் தொடர் 1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதில் இந்திய அணி ஒரு போட்டிகள் கூட தோற்காமல் பாகிஸ்தான அணியை பைனலில் வீழ்த்தி அந்தக் கோப்பையை வென்றது.
இந்தத் தொடரில் “சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ்” அவார்டு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரிக்கு கொடுக்கப்பட்டது. மொத்தமாய் இந்த போட்டியில் 50 ஓவர்கள் பௌலிங் செய்து ஐந்து மெய்டன் ஓவருடன் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
சாவியை புடுங்கி கபில்தேவ் பண்ணிய அராஜகம்
பந்துவீச்சில் கலக்கியதோடு பேட்டிங்கிலும் ஐந்து போட்டிகளில் 45.50 சராசரியுடன் 182 ரன்கள் குவித்தார். இந்த அபார சாதனைக்காக இவருக்கு ஆடி 100 செடான் ரக கார் பரிசாக கொடுக்கப்பட்டது. இந்த கூஸ்பம்ப்ஸ் நேரத்தை என்றும் மறக்க முடியாத என ரவி சாஸ்திரி தனது பேட்டியில் கூறியிருந்தார்.
ரவி சாஸ்திரிக்கு பரிசு கொடுத்ததும் அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுனில் கவாஸ்கர் சாவியை வாங்கி கபில் தேவ்விடம் கொடுத்தார். அணியில் உள்ள மொத்த வீரர்களும் கார் மேல் ஏறி மைதானத்திற்குள் வலம் வந்தனர். இதனால் கார் சிறிது சிராய்ப்புகளுக்கு உள்ளானது. உடனே ஆடி நிறுவனம் ரவி சாஸ்திரிக்கு புதிய கார் ஒன்றை கொடுத்து அசத்தியது. இதற்கு அப்பொழுது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி வரி விலக்கு செய்தார்
- கிரிக்கெட்டில் நடந்த 5 அருவருப்பான சம்பவம்
- ஒரு முறை கூட நோ-பால் வீசாத 3 கிரிக்கெட் வீரர்கள்
- இந்திய அணியை கெடுத்து குட்டி சுவராக்கிய 5 செலக்டர்ஸ்