5 Actors: 80-90 காலகட்டத்தில், தன்னுள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி நடித்தது மட்டும் அல்லாது, தன் கொள்கையை மீறாது கதாபாத்திரம் ஏற்று நடத்தி வந்த நடிகர்கள் ஏராளம். இவர்களைப் பார்த்து, இக்கால நடிகர்கள் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
படங்களில் நடிப்பதற்கு முன்பு தான் ஏற்க போகும் கதாபாத்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்துவிட்டு இறங்கும் 5 நடிகர்கள் பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம். மண் வாசம் வீசும் கிராமத்து கதை தழுவிய படங்களை ஏற்று முன்னணி கதாநாயகனாய் கலக்கியவர் ராமராஜன்.
இவர் படத்தில் குடித்தோ, புகைத்தோ நடிக்க மாட்டார். அதிக தொகை கொடுத்து நடிக்க சொன்னாலும் இது போன்ற செயல்களை ஒருபோதும் ஈடுபட மாட்டார். இவரைத் தொடர்ந்து பெண்களை தொட்டு நடிக்க மாட்டேன் என வீம்போடு பல கதாபாத்திரங்களை நிராகரித்து தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் டி ராஜேந்தர்.
மேலும் படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரத்தில் ஹீரோவாக தான் நடிப்பேன் என ஒற்றை காலில் நின்று, வந்த வில்லன் கதாபாத்திரங்களை அனைத்தையும் நிராகரித்தவர் ராஜ்கிரண். பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் தனக்கான அங்கீகாரத்தை இன்று வரை தேடி கொண்டு வரும் நடிகர் தான் செல்வா.
Also Read: கமல் சொன்னதை கண்முடித்தனமாக நம்பிய ரஜினி.. எவ்வித களங்கமும் இல்லாமல் ஜெயித்த நட்பு
இவர் நடித்தால் முக்கிய கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என நிராகரித்த படங்கள் ஏராளம். மேலும் 80ஸ் ஹீரோக்களில் கிசுகிசுக்கப்படாத நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட நடிகராய் வலம் வந்தவர் தான் சிவக்குமார். இவர்கள் அனைவரும் தன் கொள்கையில் உறுதியாக நின்றதன் காரணமாகத்தான் இன்று வரை பேசப்பட்டு வருகிறார்கள். இவர்கள் மேற்கொண்ட கொள்கை சமூகத்தின் மீது கொண்ட பொறுப்புகளை மேம்படுத்தியது என்றே கூறலாம்.
ஆனால் தற்பொழுது மாஸ் ஹீரோவான சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக செய்யக்கூடாத அனைத்து காட்சிகளுக்கும் இடம் கொடுத்து நடித்து பெயர் பெற்று வருகின்றனர். வெட்டு குத்து, அதிரடி கொலை, கொள்ளை என இவர்கள் மேற்கொள்ளும் காட்சிகள் வன்மத்தை தூண்டும் விதமாய் இருந்து வருகிறது இதில் எங்கே இருக்கிறது சமூகப் பொறுப்பு என பல கேள்வியை முன் வைக்கப்படுகிறது. ஆகையால் 80ஸ் ஹீரோக்களை போல தனக்கான கொள்கையை வைத்து நடித்து வந்தால் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக பார்க்கப்படும்.
Also Read: ஜெயிலர் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பு இல்லை.. லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்