புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குத்தாட்டம் போடும் அளவுக்கு ஐட்டம் சாங் பாடிய 5 நடிகைகள்.. சமந்தா மார்க்கெட்டை ஏற்றிவிட்ட ஆண்ட்ரியா

கதாநாயகிகளுக்கு நடிப்பு திறமையையும் தாண்டி பல விஷயங்களை தெரிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் பாடகியாக சினிமாவில் நுழைந்து அதன் பிறகு பலர் நடிகையாக மாறி உள்ளனர். இந்நிலையில் குத்தாட்டம் போடும் அளவிற்கு ஐட்டம் சாங்கை 5 நடிகைகள் பாடி உள்ளனர். அவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

மம்தா மோகன் தாஸ் தமிழில் சிலப்பதிகாரம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் பல படங்களில் பின்னணி பாடகி ஆகவும் பணியாற்றி உள்ளார். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தில் டாடி மம்மி வீட்டில் இல்ல என்ற பாடலை இவர் பாடியிருந்தார். மேலும் இந்தப் பாடல் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் உருவாகி இருந்தது.

Als0 Read : நயன்தாரா, சமந்தா இடத்தை பிடிக்க வரும் அடுத்த ஹீரோயின்.. உலகளவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை

வசுந்தரா தாஸ் நடிகையாக சில படங்களில் நடித்திருந்தாலும் பாடகியாக நிறைய பாடல்கள் கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலை பாடியிருந்தார். இதைத்தொடர்ந்து தேவா இசையில் குஷி படத்தில் இடம்பெற்ற கட்டிபுடி கட்டிப்புடிடா என்ற பாடலை பாடினார். இந்தப் பாடலுக்கு மும்தாஜ் நடனமாடி இருப்பார்.

லட்சுமி மேனன் ஒரு நடிகையாக தனது சிறந்த நடிப்பை பல படங்களில் கொடுத்திருக்கிறார். மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் லட்சுமி மேனன் ஐட்டம் சாங் பாடி இருக்கிறார். அதாவது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் குக்குரு குக்குரு என்ற பாடலை லட்சுமி மேனன் தான் பாடு இருந்தார். இந்த பாடலுக்கு நடிகை இனியா நடனமாடி இருப்பார்.

Als0 Read : எந்த இலாக்காவையும் விட்டு வைக்காத டி ராஜேந்திரரின் 5 படங்கள்.. வீராச்சாமியாய் மும்தாஜ் உடன் செஞ்ச ரவுஸ்

ரம்யா நம்பீசன் பின்னணிப் பாடகியாக தான் தனது சினிமா கேரியரை தொடங்கினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். மேலும் விஷால், லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான பாண்டியநாடு படத்தில் ஃபைவ் ஃபைவ் கலாச்சி ஃபைவ் பாடலை ரம்யா நம்பீசன் பாடியிருந்தார்.

ஆண்ட்ரியா தனது குரலால் ரசிகர்களை கட்டி போடக் கூடியவர். இவர் யுவன் சங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாந்த், ஜிவி பிரகாஷ் போன்ற பல இசையமைப்பாளர்களின் படங்களில் பாடல் பாடி இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலை ஆண்ட்ரியா தான் பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டதன் மூலம் சமந்தாவின் மார்க்கெட் உச்சத்தை தொட்டது.

Als0 Read : அந்த கேடுகெட்ட பழக்கத்திற்கு அடிமையான 6 நடிகைகள்.. ரஜினி மிஞ்சிய ஆண்ட்ரியா, அமலா பால்

Trending News