வில்லி ரோல் பண்ணி கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. ஆரம்பித்து வைத்த சிம்ரன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தால் தனது மார்க்கெட்டை இழந்துள்ளனர். அதன்பிறகு அந்த கதாபாத்திரத்தில் ஏன் நடித்தோம் என்ற அளவிற்கு அந்த நடிகைகள் வருத்தப்பட்டு உள்ளனர். அவ்வாறு வில்லி ரோலில் பண்ணி கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்களை பார்க்கலாம்.

சிம்ரன் : ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். விஜயுடன் இணைந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும், சிம்ரன் நன்றாக நடனம் ஆடக் கூடியவர். முதல்முறையாக சரண் இயக்கத்தில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் இணைந்து பிரசாந்த், லைலா ஆகியோரும் நடித்திருந்தனர்.

ஜோதிகா : ஒரு காலகட்டத்தில் அதிக ரசிகர்களை பெற்றிருந்தவர் நடிகை ஜோதிகா. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியவர். சந்திரமுகி படம் ஒன்றே போதும் ஜோதிகாவின் நடிப்பை சொல்ல. ஆனால் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ஜோதிகா வில்லியாக நடித்ததால் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

திரிஷா : தற்போது வரை அதே இளமையான தோற்றத்துடன் காட்சி அளிக்கக் கூடியவர் நடிகை திரிஷா. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் கொடூர வில்லியாக திரிஷா நடித்திருந்தார். அதன் பின்பு த்ரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

ராய் லட்சுமி : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார். அப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தில் ராய் லட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரீமா சென் : மின்னலே படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரீமாசென். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரீமா சென் சிம்புவின் வல்லவன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் பட வாய்ப்பை இழந்த ரீமா சென் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார்.