சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

யுவன் பிஜிஎம்மில் முதல் 5 இடத்தைப் பிடித்த மூவிஸ்.. அஜித்துக்கு போட்டு மரண மாஸ் கிளப்பிய படம்

Yuvan Shankar Raja Best BGM: கோலிவுட்டின் ‘பிஜிஎம் கிங்’ என புகழப்படும் யுவன், இதுவரை இசையமைத்த படங்களில் ஐந்து படங்களுக்கு அவர் போட்ட பிஜிஎம் ரசிகர்களை ஆரவாரப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் அஜித்துக்கு சிறப்பான பிஜிஎம்மை கொடுத்து மரண மாஸ் கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜாவின் வாரிசான யுவன் சங்கர் ராஜா இசையமைத்த படங்களில் பிஜிஎம்-இல் முதல் ஐந்து இடத்தை பிடித்த படங்களை பற்றி பார்ப்போம்.

காதல் கொண்டேன்: தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான். எல்லோருக்கும் காதல் கொண்டேன் படம் என சொன்னதுமே பேக்ரவுண்டில் ஒரு மியூசிக் ஒலிக்கும். அதுவும் ரொம்பவே மென்மையான காதல் உணர்வை தூண்டி விடக் கூடிய வகையில் இருக்கும். அந்த பிஜிஎம் இன்றும் பலருடைய காலர் டியூன் ஆக இருக்கிறது.

மன்மதன்: 365 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்த மன்மதன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்தார். இந்த படத்தின் வெற்றிக்கு இவருடைய பிஜிஎம் முக்கிய பங்கு வகித்தது. இதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்தார், தன்னுடைய தம்பியின் மரணத்தால் பாதிக்கப்பட்டு கொலையாளியாக மாறும் மன்மதனை காட்டும் போது மட்டும் பேக்ரவுண்டில் ஒரு பிஜிஎம்-ஐ ஒலிக்க விடுவார்கள். அதைக் கேட்கும் போதே ஒரு விதமான திகைப்பு ரசிகர்களுக்கு ஏற்படும். அதுதான் அந்த படத்தை வெற்றியடைய வைத்தது.

Also read: கிரிக்கெட் வீரரை தாஜா பண்ணும் வெங்கட் பிரபு! யுவன் மூலம் விட்ட தூது..

யுவனின் சிறந்த BGM

பில்லா: ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடித்த பில்லா படத்தில் ஒரு சில மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தி, அப்படியே அஜித்தை வைத்து மறுபடியும் விஷ்ணுவரதன் பில்லா என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் ஸ்கோர் செய்தது யுவனின் பிஜிஎம் தான். அந்த அளவிற்கு அஜித் பில்லாவாக நடந்து வரும் போது, ஒரு மாஸ் என்ட்ரியை அந்த பிஜிஎம் கொடுத்திருக்கும்.

மாநாடு: வெங்கட் பிரபு  எழுதி இயக்கிய மாநாடு படத்தின் மூலம் தான் சிம்பு தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் துவங்கினார். இந்த படம் அவருக்கு வெற்றி படமாகவே அமைந்தது. டைம் ட்ராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஒவ்வொரு முறையும் சிம்பு இறந்து மறுபடியும் உயிருடன் வரும்போது அவருக்கு பின்னால் யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் ஒன்று ஒலிக்கும். அதை கேட்கும்போதே சிலர்பூட்டும் வகையில் இருக்கும்.

மங்காத்தா: அஜித் நடித்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், அஜித்துக்கு போட்ட மரண மாஸ் பிஜிஎம்மை போட்டு ரசிகர்களை கவர்ந்தார். யுவன் இந்த படத்தில் போட்ட பிஜிஎம் தான் இதுவரை அவர் போட்ட சிறந்த படங்களில் லிஸ்டில் முதலிடத்தில் பிடித்துள்ளது. அந்த அளவிற்கு படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பிஜிஎமும் தரமாக இருக்கும்.

Also read: போட்டி போடும் ரஜினியின் வாரிசுகள்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் சூப்பர் ஸ்டார்

Trending News