திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தனுஷ் வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற்ற 5 பிரபலங்கள்.. தரமான இயக்குனரை அறிமுகப்படுத்திய பொல்லாதவன்

இப்பொழுது தனுஷ் என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் இவருடைய நல்ல மனசை பாராட்டி தான் ஆக வேண்டும். இவர் சினிமாவில் கை கொடுத்து தூக்கி விட்ட சில பேர் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில பிரபலங்களை பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இவர் தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகியாக இவருடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த விசில் படத்தில் “நட்பே நட்பே” என்ற பாடலை நடிகர் சிம்புவுடன் இணைந்து பாடினார். பின்பு 2012 ஆம் ஆண்டு 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த வாய்ப்பை நடிகர் தனுஷ் தான் இவருக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். பின்பு இதனைத் தொடர்ந்து வை ராஜா வை, சினிமா வீரன், போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இப்பொழுது ரஜினிகாந்த் வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

Also read: லால் சலாம் படத்தால் தலைவலியில் ரஜினிகாந்த்.. மகளுக்காக சூப்பர் ஸ்டார் அனுபவிக்கும் ரண வேதனை

வெற்றி மாறன்: இவர் பாலு மகேந்திரா உதவியாளர்களில் ஒருவராக பணிபுரிந்து வந்தார். பின்பு பாலு மகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “அது ஒரு கனாக்காலம்” படத்தின் மூலம் வெற்றிமாறனுக்கு தனுஷ் மிகவும் நெருங்கிய நண்பராக ஆகி விட்டார்கள். பின்பு வெற்றிமாறன் ஒரு கதையை ஏற்பாடு செய்து தனுஷிடம் சொல்லி இருக்கிறார். இதைக்கேட்ட தனுஷ், வெற்றிமாறன் மேல் இருந்த நம்பிக்கையால் இந்த படத்தை நான் நடித்த தருகிறேன் என்று கூறி இருக்கிறார். அப்படி வந்த படம் தான் “பொல்லாதவன்”. அதே சமயம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வேல் ராஜை, வெற்றிமாறனுக்கு தனுஷ் தான் பரிந்துரை செய்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன்: இவர் வெள்ளிதிரைக்கு அறிமுகமானது மெரினா படத்தின் மூலம் தான். ஆனால் இந்தப் படத்தில் எதிர்பார்த்த அளவிற்க்கு இவருக்கு இந்த பெயரும் கிடைக்கவில்லை. இவர் மேடையில் தொகுப்பாளராக பணியாற்றதன் மூலம் தனுஷ்க்கு பெரிய அளவில் ஈர்க்கப்பட்டார். அதனால் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு விமர்சன ரீதியாக பாராட்டு கிடைத்தது. இவருடைய சினிமாவின் வெற்றிக்கு ஒரு வழிகாட்டியாக தனுஷ் இருந்திருக்கிறார்.

Also read:  வெற்றி மாறன் தயாரித்து.. தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படத்தின் ட்ரைலர்.. அப்பனை கள்ளிப்பால் வச்சு கொன்னுடயா?

ராஜ்கிரண்: இவர் 80ஸ் காலகட்டத்தில் மறக்க முடியாத படங்களாக என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், வீரத்தாலாட்டு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் இவருக்கென்று தனி இடத்தை பிடித்தார். பின்பு நந்தா, பாண்டவர் பூமி சண்டக்கோழி போன்ற படங்களில் கௌரவ தோற்றத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த “பா பாண்டி” படத்தில் மீண்டும் நடிகராக தோன்றினார். இவருக்கு இந்த பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தனுஷ் தான்.

அனிருத்: ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 3 படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்தது தனுஷ் தான். முக்கியமாக இந்த படத்தில் வரும் “வொய் திஸ் கொலவெறி டி” இந்த பாடல் உலகம் முழுவதும் வைரலாகி 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்தது. இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்து இப்பொழுது முன்னணி இசையமைப்பாளராக இருப்பதற்கு வழிகாட்டியாக இருந்தது தனுஷ் அவர்கள் தான்.

Also read: அனிருத் இசையையே அட்டை காப்பி அடித்த “தீ தளபதி” தமன்.. மொத்த உழைப்பும் வீணா போச்சே என புலம்பும் விஜய்

Trending News