புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குஷ்புவின் அழகால் மெய்மறக்க வைத்த 5 படங்கள்.. இளசுகளை ஜொள்ளு விட வைத்த நந்தினி

Actress Khushboo was very beautiful in 5 films: நடிகை குஷ்பூ, டாப் ஹீரோயினாக இருந்த சமயத்தை காட்டிலும் இப்போதுதான் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். அதுவும் 53 வயதில் இளசு போல் ஸ்லிம்மாகி சின்னத்தம்பி படத்தில் நடித்த நந்தினி போலவே காட்சியளிக்கிறார். இவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியது கரெக்டு தான். இவர் கதாநாயகியாக நடித்த ஐந்து படங்களை இப்போதும் பார்த்தால் கூட இளசுகள் ஜொள்ளு விடுகின்றனர்.

வருஷம் 16: நவரச நாயகன் கார்த்திக்குக்கு ஜோடியாக இந்த படத்தில் குஷ்பூ நடித்திருந்தார். இதில் இளமை ததும்பும் அழகுடன் ராதிகா என்ற கேரக்டரில் குஷ்பூ வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் மெய்மறந்து பார்த்தனர். மேலும் தற்போது வரை குஷ்பு ரசிகர்களுக்கு இந்த படம் தான் ஃபேவரிட் படமாக உள்ளது.

சின்னதம்பி: ஒரு காலத்தில் காதலர்களாக இருந்த பிரபு- குஷ்பூ இருவரும் ஜோடி போட்ட படம் தான் சின்னதம்பி. இதில் குஷ்பு தன்னுடைய அண்ணன்கள் பாசத்திற்கு அடிமையாகி தன்னுடைய காதலனை பிரிந்து பரிதவிக்கும் காட்சி பலரையும் கண்ணீர் வர வைத்தது. இன்று வரை இந்த படத்தை டிவியில் போட்டால் பார்க்காமல் இருக்க முடியாது. குஷ்பூவுக்காகவே ஜொள்ளுவிட்டு பார்ப்பார்கள்.

Also Read: குஷ்பூ புருஷன் என கொண்டாடப்பட்ட சுந்தர்.சி.. இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா.?

குஷ்பூ மிக அழகாக இருந்த ஐந்து படங்கள்.

சிங்காரவேலன்: நடிகை குஷ்பூ, உலக நாயகனுடன் இந்த படத்தில் ஜோடி போட்டார். அதுவும் கமல், தன்னுடைய மாமன் மகள் குஷ்புவை அடையாளம் கண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பட்டணத்திற்கு வந்து குஷ்பூவை ஒரு வழியா காதலிக்க வைத்து விடுவார். இந்த படத்தில் மாடர்ன் உடையில் குஷ்பூ ஒரு பார்பி டால் போலவே தெரிவார். இதில் குஷ்புவின் திமிரான நடிப்பை பார்க்க முடியும்.

மைக்கேல் மதன காமராஜன்: உலக நாயகன் கமலஹாசன் நான்கு வேடங்களில் நடித்த படத்தில் ஷாலினி என்ற கேரக்டரில் குஷ்பூ கதாநாயகியாக நடித்தார். இதில் கமலுடன் கொஞ்சம் கிளாமர் தூக்கலாக நெருக்கமாக டான்ஸ் ஆடி இளசுகளை திணறடித்தார். இதில் குஷ்பு மட்டுமல்ல ஊர்வசி, ரூபினியும் இணைந்து நடித்தனர்.

மன்னவன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயசாந்தி நடிப்பில் வெளியான அதிரடி ஆக்சன் படமான மன்னவன் படத்தில் குஷ்பூவும் இணைந்து நடித்தார். இதில் சூப்பர் ஸ்டார் உடன் இவர் டூயட் ஆடும் காட்சி இன்றும் ரசிகர்களின் கண்முன் வந்து போகும். இதில் குஷ்பூவும் ரஜினியும் காதலித்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜயசாந்தியை திருமணம் செய்து கொள்வார் ரஜினி. இந்தப் படத்தில் குஷ்புவின் இளமையான லுக்கை பார்த்தால், ‘இது பொண்ணா! இல்ல தேவதையா!’ என ரசிகர்களை மெய் மறக்கச் செய்யும்.

Also Read: இளசுகளின் தூக்கத்தை கெடுத்த குஷ்புவின் 5 படங்கள்.. இவங்களுக்கு கோவில் கட்டியது தப்பே இல்ல

Trending News