புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காலங்கள் தாண்டியும் பேசப்படும் கமலின் 5 படங்கள்.. பார்ட் 2-க்காக ஏங்க வைத்த தேவர் மகன்

பொதுவாகவே கமல்ஹாசன் படங்களை பார்ப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். முக்கியமாக இவரின் சில படங்கள் எப்பொழுது பார்ட் 2 வரும் என்று எதிர்பார்க்க வைத்த படங்களும் இருக்கிறது. அத்துடன் இவர் அந்த காலத்தில் நடித்த படங்கள் அனைத்தும் எத்தனை காலங்கள் ஆனாலும் பார்க்க தூண்டும் படமாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

விருமாண்டி: 2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி படத்தை கமல்ஹாசன் அவர்கள் இயக்கி அந்த படத்திற்கான கதைகளை எழுதியும் மற்றும் தயாரிக்கவும் செய்திருப்பார். இப்படத்தில் இவருடன் பசுபதி, அபிராமி, ரோகினி, நெப்போலியன் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படம் இரண்டு பேரின் சிறைக் கைதிகளின் வாழ்க்கையைப் பற்றி சொல்லும் விதமாக கதை அமைந்திருக்கும். இப்படம் உலகம் முழுவதும் 456 திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்று அதிக பாராட்டுகளை வாங்கி இருக்கிறது. இப்படத்தின் உத்வேகத்தை வைத்து வெற்றிமாறன் ஆடுகளம் படத்திலும், லோகேஷ் கைதி படத்தை எடுப்பதற்கு அதிக அளவில் ஈர்க்கப்பட்டது இப்படம் தான் என்று கூறி இருக்கிறார்கள்.

Also read: கஜானாவை திறக்காமலே படத்தை தயாரிக்கும் கமல்.. ராஜதந்திரியாக மாறிய உலக நாயகன்

அன்பே சிவம்: சுந்தர் சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு அன்பே சிவம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் சந்தான பாரதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் எதிர்பாராத விதத்தில் ஒன்றாக பயணிக்கும் மாறுபட்ட இருவர்களின் கதைகளை பற்றி சொல்லும் படமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் தமிழ் சினிமாவின் உன்னதமான திரைப்படமாக கருதப்படுகிறது.

ஆளவந்தான்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஆளவந்தான் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வெளியான ஆரம்பத்தில் கலவையாக விமர்சனங்கள் இருந்தன. ஆனால் சில வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் கதையை புரிந்து கொண்டு படத்தை ரசிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த படத்தை இப்பொழுது பார்க்கும்போது இந்த கதை எல்லாம் எப்படி உருவாக்கினார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

Also read: அடுத்து ஆஸ்கர் கதவை தட்டப்போகும் படம்.. உலகநாயகன் செய்யப்போகும் வரலாறு

ஹேராம்: கமல் இயக்கி, தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் ஹேராம். இப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி என்று பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியான போது கொஞ்சம் தோல்வியை பார்த்தது. ஆனால் மூன்று தேசிய விருதுகளை கைப்பற்றியது அது மட்டுமின்றி ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இப்படம் விமர்சனம் ரீதியாக பாராட்டு பெற்றது.

தேவர்மகன்: பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கௌதமி மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது, ஒரு மரியாதைக்குரிய கிராமத் தலைவரின் மகன் ஒரு தொழிலை தொடங்க விரும்பும் போது அவரது தந்தை கிராம மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லி அவருடைய ஆசையை மாற்றுகிறார்.பிறகு அந்த கிராமத்திற்கு இவர் செய்யும் உதவியை கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சனத்திற்காகவும் வெற்றி பெற்றது. அத்துடன் இந்தப் படத்திற்கு எப்பொழுது பார்ட் 2 வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் படி இந்த கதையை அமைந்திருக்கிறது.

Also read: கமல் மாதக்கணக்கில் உழைத்ததை, மூன்றே நாள் கால் சீட்டில் தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சிவகுமார் சொன்ன ரகசியம்

Trending News