சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

ஹாலிவுட் க்கு நிகராக தமிழில் வெளிவந்த 5 திருட்டு காட்சிகள்.. துணிவு அஜித்தை மிஞ்சிய ருத்ர பாக்யராஜ்

தமிழில் எத்தனை படங்கள் விறுவிறுப்பாக வந்தாலும் சில படங்கள் ஹாலிவுட் க்கு நிகராக படத்தின் காட்சிகளை எடுத்து சுவாரஸ்யமாக்கி வெற்றி பெற்றிருப்பார்கள். முக்கியமாக பாக்கியராஜ் 90ஸ் காலகட்டத்திலேயே ஹாலிவுட் அளவிற்கு படத்தை எடுத்திருப்பார். மேலும் அந்தப் படத்தில் எப்படி பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை வித்தியாசமாக காட்டி இருப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

மங்காத்தா : வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்தார்கள். இப்படம் கிரிக்கெட் பந்தய பணத்தை சுற்றி நான்கு திருடர்கள் கொண்ட கும்பலால் கொள்ளை அடிக்கப்படுவதால், அதன் பிறகு சில பிரச்சனைகள் ஏற்பட்டு கடைசியில் யார் கைப்பற்றுகிறார்கள், எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை படமாக எடுக்கப்பட்டிருக்கும். இது அஜித்தின் 50-வது திரைப்படம். இப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஜென்டில்மேன்: ஷங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தின் மூலம் ஷங்கர் இயக்குனராக அறிமுகம் ஆனார். இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் மற்றும் சுபாஷ் ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அர்ஜூன் பணக்காரர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்காகவும் மற்றும் கல்விக்காக கொடுப்பதற்காக திருட்டு வேலையை கச்சிதமாக செய்து முடிப்பார். இப்படம் அர்ஜுனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் நடித்த பிறகு முன்னணி நடிகர்கள் ஒருவராக பிரபலமானார்.

ருத்ரா : சசி மோகன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு நகைச்சுவை திரில்லர் திரைப்படமாக ருத்ரா வெளிவந்தது. இதில் பாக்கியராஜ், கௌதமி, லட்சுமி ஆகியோர் நடித்தவர்கள். இப்படம் வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளை அடித்து கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுப்பதற்காக ஒரு பிளான் போட்டு வங்கிக்கு வருவார். பிறகு அங்கு நடக்கும் விஷயங்களை சுவாரிசியமாக ரசிக்கும்படி கதையை கொண்டு போய் இருப்பார். இந்தப் படத்தை பார்க்கும்போது இப்பொழுது வந்த அஜித்தின் துணிவு படத்தை மிஞ்சும் அளவிற்கு பாக்கியராஜ் அந்த காலத்திலேயே பேங்கில் கொள்ளையடித்து இருக்கிறார். இப்படம் அப்பொழுது வெளிவந்த தளபதி மற்றும் குணா படங்களுக்கு கடும் போட்டியாக வெளிவந்தது.

தானா சேர்ந்த கூட்டம் : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சூர்யா, கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ் மற்றும் கலையரசன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் வருமான வரி அதிகாரி என்று பொய் சொல்லி பல இடங்களில் கும்பலாக போய் பணத்தை சுருட்டுவது தான் படமாக எடுக்கப்பட்டிருக்கும். இக்கதை உண்மை கதை ஆனது. இப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் மனித ரீதியாகவும் வெற்றி பெற்றது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் : தேசிங்கு பெரியசாமி 2020 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் எப்படி வேணாலும் வாழ்க்கையே வாழலாம். அதற்கு பணம் தான் தேவைப்படும் என்று நிறைய திருட்டு வேலைகளை செய்து பணத்தை சுரண்டுவதை குறிக்கோளாக வைத்து விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கும். இப்படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Trending News