செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

காமெடி இல்லாமல் ஹீரோவாக விவேக் நிரூபித்த 5 படங்கள்.. சீரியசான கேரக்டரில் நடித்த ஒரே படம்

சின்ன கலைவாணர் விவேக் என்றாலே நம் மனதிற்கு முதலில் தோன்றும் விஷயங்கள் சமுதாய கருத்துள்ள விஷயங்களை அவருடைய பாணியில் காமெடி கலந்து சொல்லும் விதமாக நடித்துக் காட்டுவார் என்பதுதான் . அப்படிப்பட்ட இவர் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய சில படங்கள் இருக்கிறது. அதிலும் சீரியஸான கேரக்டரிலும் நடித்துக் காட்டி இருப்பார். அந்தப் படங்களை பற்றி பார்க்கலாம்.

செந்தூர தேவி: ராம நாராயணன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு செந்தூர தேவி திரைப்படம் வெளிவந்தது. இதில் விவேக், கனகா, ஷாம்லி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விவேக்குக்கு ஜோடியாக கனகா நடித்திருப்பார். அத்துடன் விவேக் வீட்டில் யானை, நாய், குரங்கு மற்றும் குதிரை என்று நான்கு விலங்குகளுடன் அதிகம் நேரம் இருப்பதால் கோபத்தில் கனகா இவரை விட்டு பிரிந்து விடுவார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் அதனால் இவரிடம் ஒரு குழந்தையும் கனகாவிடம் ஒரு குழந்தையும் வளர்ந்து வரும். அதன் பிறகு இவர்கள் எப்படி ஒன்று செய்கிறார்கள் என்பதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: விவேக் நடித்த கடைசி படம்.. இறப்பதற்கு முன் நிறைவேறிய ஆசை!

நான்தான் பாலா: கண்ணன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு நான் தான் பாலா என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் விவேக், ஸ்வேதா பண்டேகர் மற்றும் மயில்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விவேக் எந்த நகைச்சுவையும் காட்டாமல் கோவில் பூசாரியாக நடித்தார். அவர் சொல்லும் சமஸ்கிருத வசனங்களுடன் பிராமண உச்சரிப்பில் அவருடைய டயலாக் டெலிவரி நன்றாக இருக்கும்.

பாலக்காட்டு மாதவன்: எம் சந்திரமோகன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பாலக்காட்டு மாதவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விவேக், சோனியா அகர்வால் மற்றும் ஷீலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் விவேக் ஒரு சோம்பேறி மற்றும் பொறுப்பற்ற மனிதராக இவரது மனைவியின் வருமானத்தில் வாழக்கூடியவராக இக்கதை அமைந்திருக்கும். இதில் இவர் கதாநாயகனாக நடித்திருப்பார். ஆனாலும் இவருடைய பாணியில் காமெடி கலந்தும் சில விஷயங்களை செய்து நகைச்சுவையை வெளி காட்டி இருப்பார்.

Also read: சமீபத்தில் மாரடைப்பால் இறந்து போன 5 காமெடி நடிகர்கள்.. திரை உலகையே உலுக்கிய விவேக், மயில்சாமியின் மரணம்

எழுமின்: வி.பி.விஜி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு எழுமின் திரைப்படம் வெளிவந்தது. இதில் விவேக், தேவயானி, அழகப் பெருமாள் மற்றும் பிரேம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுவதும் குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர்களுக்கு விவேக் கூறும் அறிவுரைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் விவேக் செய்யும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் அதிகமான பாராட்டுகளை பெற்றார்.

வெள்ளை பூக்கள்: விவேக் இளங்கோவன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெள்ளைப் பூக்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் விவேக், சார்லி, தேவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விவேக் குற்றப்பிரிவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கேரக்டரில் நடித்திருப்பார். இதில் மிகவும் சீரியஸான கேரக்டரில் குற்றங்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு நடிப்பை வேறொரு கோணத்தில் நடித்துக் காட்டி இருப்பார்.

Also read: விவேக்கை அவமானப்படுத்திய 2 ஹீரோக்கள்.. நான் இருக்கிறேன் என்று துணையாய் நின்ற குழந்தைகுணம் நடிகர்

Trending News