வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயித்த இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் 5 ஹீரோக்கள்.. கட்டம் சரியில்லாமல் இருக்கும் விஷால்

சினிமாவில் கஷ்டப்பட்டு தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் சில நடிகர்கள். அவர்கள் மேலும் உச்சத்திற்கு சென்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயித்த இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். அந்த நடிகர்கள் யார் என்று பார்க்கலாம்.

சூர்யா: இவர் சினிமாவில் நுழைந்த காலத்தில் நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது போன்ற படங்களில் ரொமான்ஸ் ஹீரோவாக நடித்து வந்தார். அதன் பின் இவருக்கு மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக காட்டிய படம் தான் நந்தா. இப்படம் இவருடைய சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்தது இயக்குனர் பாலா. இதனை அடுத்து பிதாமகன், பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக ரசிகர்களை சம்பாதித்து விட்டார். இந்த நேரத்தில் இவருடைய அடுத்தடுத்து படங்களுக்கு இயக்குனரை எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்றால் எந்த இயக்குனர் கதையில் நடித்தால் படம் வெற்றி ஆகும் என்று யோசித்து அதற்கேற்ற மாதிரி இயக்குனரை தேர்வு செய்து வருகிறார்.

Also read: மீண்டும் இணையும் ஆயுத எழுத்து கூட்டணி.. டாப் ஹீரோயினை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய படக்குழு

கார்த்தி: இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை கொடுத்து நல்ல விமர்சனங்களை பெற்றார். அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, பிரியாணி, மெட்ராஸ், கைதி போன்ற பல வெற்றி படங்களை நடித்து முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் எப்பொழுதுமே இயக்குனரை வைத்து தான் படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அதிலும் இவர் நடிக்கும் இயக்குனர் எப்படி இருக்கணும் என்றால் குறைந்தது மூன்று படங்களை ஆவது இயக்கி இருக்க வேண்டும். அதில் ஒன்று மிக ஹிட் படமாக அமைந்திருக்கணும் என்று கண்டிஷன் உடன் இருக்கிறார்.

ஆரி: இவர் இயக்குனர் சங்கர் தயாரித்த ரெட்டைச்சுழி திரைப்படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். அதன் பின் நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் மிகவும் பரிச்சயமானது பிக் பாஸுக்கு சென்ற பிறகுதான் மிகவும் பரிச்சயமாகி மக்களிடத்தில் அதிகமான வரவேற்பை பெற்றார். அதன்பின் தற்பொழுது வருகிற எல்லா படங்களையும் ஏற்று நடிக்காமல் இவர் இயக்கத்தில் நடித்தால் நம்முடைய வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நினைத்து அதற்கேற்ற மாதிரி இயக்குனரை பார்த்து வருகிறார்.

Also read: கடனை கொடுக்காமல் வாய்ச்சவடால் விடும் விஷால்.. கொந்தளித்து போய் லைக்கா எடுத்த அஸ்திரம்

பாபி சிம்ஹா: இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின் பீட்சா, நான் ராஜாவாகப் போகிறேன், சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா, மகான் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்களில் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்து வந்த படம் தான் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தை இவரை தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு நடித்திருக்க முடியாது என்று பெயர் சொல்லும் அளவிற்கு நடித்திருப்பார். அதே மாதிரி தற்போதும் ஒரு வெயிட்டான கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறார்.

விஷால்: இவர் செல்லமே, சண்டைக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன் போன்ற பல படங்களில் நடித்து பெரிய மாஸ் ஹீரோவாக வலம் வந்தார். அதன்பின் இவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை நேரம் சரியில்லாத காரணத்தால் நடித்த படங்களில் எதுவுமே பெரிய அளவில் வெற்றியாகாமல் கொஞ்சம் பின்னுக்குப் போய்விட்டார். இப்பொழுது மறுபடியும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக வெற்றிய இயக்குனரிடம் மட்டுமே கூட்டணி வைக்க இருக்கிறார்.

Also read: பாபி சிம்ஹாவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை ட்ரெய்லர்.. இங்கேயும் பயமுறுத்தும் ஆர்யா

Trending News