வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆண்டவரை நம்பி மோசம் போன 5 நடிகர்கள்.. அர்ஜுன் மார்க்கெட் போக காரணமாக இருந்த படம்

Actor Kamal: கமல் படத்தில் நடித்தால் எப்படியும் விடிவு காலம் ஏற்படும் என்று பல நடிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் கமல் படத்தில் நடித்ததன் மூலம் தங்கள் மார்க்கெட்டை ஐந்து நடிகர்கள் இழந்திருக்கிறார்கள். ஏனென்றால் நடிப்பில் வல்லவன் ஆன கமலுக்கு ஈடு கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு ஆண்டவரை நம்பி மோசம் போன நடிகர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபுதேவா : நடன கலைஞராக சினிமாவில் நுழைந்தாலும் தனது திறமையால் கதாநாயகன் அந்தஸ்தை பெற்றார் பிரபுதேவா. பெரும்பாலும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்தாலும் அவருக்கான வாய்ப்பு அடுத்தடுத்து வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் காதலா காதலா படத்தில் கமலுடன் நடித்த நிலையில் அவரது மார்க்கெட் சரியா தொடங்கியது.

Also Read : பிரம்மாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய கேடி.குஞ்சு மோகனின் 5 படங்கள்.. இப்ப வர பிரபுதேவா உருட்டும் ஒரே படம்

மாதவன் : சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் மாதவன். அதுவும் அவரது நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி கொண்டிருந்தது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாதவன் வருவார் என எதிர்பார்த்த நிலையில் இருந்த இடம் தெரியாத அளவுக்கு போய்விட்டார். இதற்கு காரணம் கமலுடன் அவர் சேர்ந்து நடித்த அன்பே சிவம் படம் தான் என்று கூறப்படுகிறது.

அர்ஜுன் : ஆக்ஷன் கிங் அர்ஜுன் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தார். ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்கள் அர்ஜுனன் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்த சூழலில் கமலுடன் சேர்ந்து குருதிப்புனல் படத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். அதன் பின்பு வாய்ப்பு அவருக்கு சரியாக கிடைக்கவில்லை.

Also Read : ஒதுங்கிய ரஜினி, இறங்கிய அர்ஜுன்.. 23 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்

பிரபு : வெளந்தியான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பிரபு. கதாநாயகனாக கலக்கி வந்த பிரபு ஒரு கட்டத்திற்கு மேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படிதான் கமலின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் பிரபுவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

அப்பாஸ் : அப்பாஸுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் அப்போது இருந்து வந்தது. இந்த சூழலில் அப்பாஸ் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் தான் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் தனது 25 வது படத்தில் கமலுடன் இணைந்தார். அதாவது பம்மல் கே சம்பந்தம் படத்தில் அப்பாஸ் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஹீரோ வாய்ப்பு சரிவர கிடைக்கவில்லை.

Also Read : எல்லா பெரும் தலைகளுடன் நடித்த அப்பாஸ்.. 5 படங்களிலும் ஆடியன்சை அள்ளிய சாக்லேட் பாய்

Trending News