செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

80களில் ரஜினி, கமலையும் பயப்பட வைத்த 5 ஹீரோக்கள்.. பெண்களை விடுங்க ஆம்பளையும் சுற்ற வைத்த நடிகர்

80களில் பெரிய நட்சத்திரங்களாக இருந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தவர் ரஜினி, கமல். இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். அப்பொழுது இவர்களுக்கு போட்டியாக ஐந்து ஹீரோக்கள் சினிமாவில் நுழைந்து மிகவும் பிரபலமானவர்கள். இவர்களை பயப்பட வைத்த ஹீரோக்கள் என்று கூட சொல்லலாம்.

ராமராஜன்: இவர் தமிழ் சினிமாவில் முதலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின்பு நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் பணிபுரிந்தார். 1986 ஆம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் எப்பொழுதும் கிராமசார்ந்த திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதுவே இவருடைய அடையாளமாகவும் மாறியது. இதை தொடர்ந்து கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன்,செண்பகமே செண்பகம், பாட்டுக்கு நான் அடிமை ஆகிய படங்களில் மூலம் பெரிய நட்சத்திரமாக மாறினார். மேலும் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் அவர்களுடன் ஒப்பிடும் பொழுது இவர் படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. இவரை மக்கள் நாயகன் என்றும் அழைக்கப்படுவார்.

Also read: ராமராஜன் மறுத்த 5 இரண்டாம் பாக படங்கள்.. விஜய் மில்டனை விரட்டியடித்த வில்லுபாட்டுகாரன்

மோகன்: இவர் கன்னட படத்தின் மூலம் நடிகராக சினிமாவிற்குள் வந்தார். பின்பு மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த மூடுபனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதே நேரத்தில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு போட்டியாக மூடுபனி படம் வெளிவந்தது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடியது. இதை தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை போன்ற வெற்றிப் படங்களை வரிசையாக கொடுத்தார்.

பாக்கியராஜ்: இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின்பு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து பாமா ருக்மணி, மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் போன்ற திரைப்படங்களில் நடித்து நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். பின் இவர் நடித்த முந்தானை முடிச்சு, சின்ன வீடு இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

Also read: தமிழிலும், தெலுங்கிலும் வெள்ளிவிழா கண்ட ஒரே படம்.. 80 களில் இயக்குனர்களை அலற விட்ட பாக்கியராஜ்

சுதாகர்: இவர் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் 600க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார். தமிழில் கிழக்கே போகும் ரயில் நடித்து சூப்பர் ஹிட் படமானது. பின்னர் தமிழில் ஒரு நடிகராக இவரை நிலை நிறுத்திக் கொண்டார். இவரும் ராதிகாவும் 11 படங்களில் இணைந்து நடித்து வெற்றி ஜோடியாக இருந்தனர்.

ராம்கி: இவர் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் அறிமுகமான படத்திலிருந்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அதிலும் இவர் நடித்த செந்தூரப்பூவே, மருதுபாண்டி, இணைந்த கைகள், கருப்பு ரோஜா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததின் மூலம் மிகவும் ரசிகர்களை கவர்ந்தார். அந்த காலத்தில் இவருடைய போட்டோ வைத்துக்கொண்டு கல்லூரி பெண்கள் சுற்றி வந்தனர். அதிலும் பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களையும் சுற்ற வைத்த நடிகர் என்றே சொல்லலாம்.

Also read: இப்போதுள்ள ஹீரோயின்கள் கூட ஜொள்ளுவிடும் 90’s ஹீரோக்கள்.. ராம்கி ஹேர் ஸ்டைலை இன்றும் மறக்காத குஷ்பூ

Trending News