திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கரண் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. கர்வத்தால் எல்லாத்தையும் இழந்த ஹீரோ

கரண் ஐந்து வயதிலேயே சினிமாவிற்குள் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் கௌரவத் தோற்றத்தில் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். பின்பு நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதனால் இவருக்கு கொஞ்சம் தலைகனம் ஏறிவிட்டது என்றே சொல்லலாம். அதனால் கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார். அப்படிப்பட்ட இவர் சில படங்களில் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

லவ் டுடே: பாலசேகரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு லவ் டுடே திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் விஜய், சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன் மற்றும் கரண் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தக் காதல் கைக் கூடாமல் போவது போல் கதை அமைந்திருக்கும். இதில் விஜய்யோட நண்பராக கரண், பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் மிகவும் வெற்றி பெற்றது. மற்றும் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

Also read: கரண் சினிமாவில் காணாமல் போக காரணம் இதுதானாம்.. வருடங்களுக்கு பிறகு வெளியான தகவல்

கண்ணெதிரே தோன்றினாள்: ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், கரண் மற்றும் விவேக் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் நட்புக்கும், காதலுக்கும் இடையே அழகான ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கும். இதில் பிரசாந்துக்கு நண்பராக கரண் நடித்திருப்பார். இவருக்கு இந்த படம் பெரிய அளவில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.

காதல் மன்னன்: சரண் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு காதல் மன்னன் திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், மானு, எம்எஸ் விஸ்வநாதன், விவேக் மற்றும் கரண் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும். இதில் கரண் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவாகவுள்ள மல்டி ஸ்டார் சரித்திர படத்தின் தலைப்பு, லுக் , நடிகர்கள் விவரம்

கருப்பசாமி குத்தகைதாரர்: அ.கோவிந்தமூர்த்தி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படம் வெளிவந்தது. இதில் கரண், மீனாட்சி, வடிவேலு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் காதல் மற்றும் நகைச்சுவை போன்ற கலவையாக எடுக்கப்பட்டிருக்கும். இது கலவையான விமர்சனங்களை பெற்று மற்றும் பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக ஓடியது.

நம்மவர்: கே.எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு நம்மவர் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமலஹாசன், கௌதமி, நாகேஷ், செந்தில் மற்றும் கரண் ஆகியோர் நடித்தார்கள். இதில் கரண் கல்லூரியில் நடக்கும் விஷயங்களுக்கு எதிராகவும் மற்றும் திமிர் பிடித்தவர் ஆகவும் மேலும் இவரை நல்ல ஒரு மாணவனாகவும் மாற்றுவது போல் கதை அமைந்திருக்கும். இந்த கதைக்கு இவர்தான் சரியாக பொருந்தும் என்று கமல் இவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

கண்ணுபட போகுதய்யா: பாரதி கணேஷ் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு கண்ணுபட போகுதய்யா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் சிம்ரன், சிவகுமார் மற்றும் கரண் ஆகியோர் நடித்தார்கள். இதில் விஜயகாந்துக்கு தம்பியாக கரண் நடித்திருப்பார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: கேஜிஎப் யாஷ் கெட்டப்புக்கு மாறிய கரண்.. கடவுளின் தரிசனம் என ரசிகர்கள் கொண்டாட்டம்

Trending News