ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஹீரோக்களால் காமெடி பீஸ் ஆன 5 வில்லன்கள்.. விவேக் ஓபராயை பங்கம் செய்த அஜித்

சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம், கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு வில்லன் கேரக்டரும் மாஸாக காட்டியிருப்பார்கள். ஆனால் ஒரு சில படங்களில் டெரராக இருக்கக்கூடிய வில்லன்களை கூட  ஹீரோக்கள் தங்களின் நடிப்பின் மூலம் பங்கம் செய்துள்ளனர். அப்படியாக ஹீரோக்களால் காமெடி பீஸ் ஆன 5 வில்லங்களை இங்கு காணலாம்.

தேவ் கில்: எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சுறா. இதில் விஜய் உடன் தமன்னா, தேவ் கில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எப்படியாவது ஹீரோவை போலீசில் மாட்டி விட வேண்டும் என்று வில்லன் போட்ட ரூட்டை விஜய், வடிவேல் உடன் சேர்ந்து அவருக்கு எதிராகவே திருப்பி விட்டிருப்பார்.

Also Read: மோசமான ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்தாத விஜய்யின் 5 படங்கள்.. ஆடியன்சை வெறுக்கச் செய்த தளபதி

விஜய் ராஸ்: இயக்குனர் ஆர் எஸ் துறை செந்தில் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காக்கி சட்டை. இதில் சிவகார்த்திகேயன் உடன் ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் விஜய் ராஸ், துரை அரசன் என்னும் கதாபாத்திரத்தில் ஆதரவற்ற இளைஞர்களின் உடல் உறுப்புகளை திருடும் வில்லனாக நடித்திருப்பார். இதில் சிவகார்த்திகேயன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வில்லனுக்கே தண்ணி காட்டி இருப்பார்.

பாபி சிம்ஹா: இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் சாமி 2. இதில் விக்ரம் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் இவருக்கு எதிர்மறையான கேரக்டரில் பாபி சிம்ஹா தனது கொடூரத்தனத்தை காட்டியிருப்பார். மேலும் இப்படத்தில் வில்லனுக்கு உண்டான கம்பீரத்தையே கெடுத்து ராவண பிச்சையை ஓட ஓட விரட்டி பயத்தினை காட்டி இருப்பார்.

Also Read: வேள்பாரியில் சூர்யா இல்லை.. முரட்டுத்தனமான ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் ஷங்கர்

வினய் : பாண்டியராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இதில் சூர்யா உடன் வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் பெண்களை அவமானப்படுத்தும் மோசமான வில்லன் ரோலில் வினய் நடித்திருந்தார்.மேலும் சூர்யா இதில் வில்லனுக்கு எதிராக பெண்களை வைத்தே பாடம் புகட்டி மாஸ் காட்டி இருப்பார்.

விவேக் ஓபராய் : சிவா இயக்கத்தின் 2017 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் விவேகம். இதில் அஜித் உடன் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் வில்லன் கேரக்டரில் தனது திட்டத்திற்காக மாஸ்டர் பிளான் போடும் ஓபராயை, அஜித் தனது நடிப்பின் மூலம் பயங்கரமாக பங்கம் செய்திருப்பார்.

Also Read: இவங்கள தவிர இந்த 6 வில்லன் ரோலில் யாராலும் நடிக்க முடியாது.. போலீசாக இருந்து மங்காத்தா ஆடிய அஜீத்

Trending News