திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சோலோவா இந்தியன் 2க்கு டஃப் கொடுக்க வரும் படம்.. வயிற்றெரிச்சலில் சூர்யா!

Indian 2 : இந்தியன் 2 ஜூலை 12ஆம் தேதி ரிலீசாகிறது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் இப்போது ஜூன் மாதம் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது. ஜூன் 6-ம் தேதி ஏ எம் ரத்தினம் தயாரிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்தியன் 2 படம் வெளியாவதை அடுத்து பல படங்கள் நமக்கு ஏன் வம்பு என ஜூலை ரிலீஸ் இல் இருந்து வெளியேறியது. இப்பொழுது நம்ம படம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையோடு சோலோவாக இந்தியன் 2க்கு டப் கொடுக்க ரெடியாகிவிட்டார் முரட்டு இயக்குனர் ஒருவர்.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் படம் என்றாலே பல படங்கள் ரேஸிலிருந்து வெளியேறும். அப்படி ஜூலை மாதம் ரிலீஸ் ஆகாமல் பல படங்கள் தள்ளிப் போய் உள்ளது. ராயன், ஹிட்லர், தங்கலான் என பல படங்கள் ஜூலை மாதம் வெளியாக இருந்தது.

இப்பொழுது இந்தியன் 2 வந்தால் நமக்கு என்ன என்று அருண் விஜய் நடித்த வணங்கான் படத்தை வெளியிடுகிறார் பாலா. இந்தப் படமும் ஜூலை மாதம் தான் வெளியாக இருக்கிறது. இந்தியன் 2க்கு இரண்டு நாட்கள் முன்னோ பின்னோ வணங்கான் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கடும் வயிற்றெரிச்சலில் சூர்யா

நேரம் நன்றாக இருந்தால் ஜூலை 12ஆம் தேதியே கமலின் இந்தியன் 2 க்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் என்று கூறியுள்ளார் பாலா. வணங்கான் படம் அவ்வளவு அருமையாக வந்திருக்கிறதாம், நிச்சயமாக இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என நம்புகிறார் பாலா.

அருண் விஜய்க்கு இந்த படம் கேரியர் பெஸ்ட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூர்யா, இந்த படத்தில் நடித்து பத்து நாட்கள் ஷூட்டிங் சென்ற பின் விலகி விட்டார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி சூர்யாவின் மூக்கை உடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பாலா. சூர்யாக்கு இந்த ஹிட் ஒரு வயிற்றெரிச்சலை கொடுக்கும் என வணங்கான் மொத்த யூனிட்டும் கூறுகிறது.

14 வருட போராட்ட இந்தியன்-2

Trending News