ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டுமானால் அது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. முதல் பாகத்தில் கொடுத்த lead-க்கு தகுந்தார் போல் அத்தனை ஆர்டிஸ்ட் களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி மிகவும் கஷ்டப்பட்டு அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் நான்கு செகண்ட் பார்ட் படங்கள்.
இரும்புத்திரை 2: 2018ஆம் ஆண்டு பி எஸ் மித்ரன் இயக்கிய படம். ஆன்லைன் மோசடி பற்றி வெளிவந்த கதை. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாக இருக்கிறது. இப்பொழுது நிறைய ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகிறது அதனால் சரியான சந்தர்ப்பம் என இதை கையில் எடுத்துள்ளார் மித்ரன்.
சதுரங்க வேட்டை 2: இந்த படம் 90 சதவீதம் முடிந்து விட்டது. அரவிந்த்சாமி டப்பிங் பேசாமல் இழுத்தடித்து வருகிறார். திரிஷா மற்றும் அரவிந்த்சாமி இருவரும் மோசடி பேர்வழியாக இதில் நடித்துள்ளனர். முதல் பாகம் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் நடித்து சூப்பர் ஹிட்டானது.
7 ஜி ரெயின்போ காலனி 2: 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. இதன் இரண்டாம் பாகம் இப்பொழுது 2025 மே மாதம் வெளிவர இருக்கிறது. காதலை விட தந்தை மகன் பாசத்தை நன்றாக காட்டியிருப்பார் செல்வராகவன்
சர்தார் 2: எந்த படமும் கை கொடுக்காத நிலையில் கார்த்தி பெரிதும் நம்பி இருக்கும் படம் சர்தார் 2. இந்த படத்தை இயக்கியவர் p s மித்ரன். இப்பொழுது இவர் தான் அடுத்து இரும்புத்திரை இரண்டாம் பாகத்தையும் எடுக்க உள்ளார். சர்தார் 2 படம் அடுத்த வருடம் சம்மரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.