வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அனிமல் முதல் ஃபைட் கிளப் வரை.. இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் படங்களின் மொத்த லிஸ்ட்

This Week OTT release Movie List:  தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் அதன் தொடர்ச்சியாக ஓடிடி-யிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் படங்களின் லிஸ்ட் இதோ!

சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய அனிமல் திரைப்படம் வரும் ஜனவரி 26ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 23ஆம் தேதி புக் மை ஷோ ஓடிடி தளத்தில் அக்வாமேன் 2 படம் வெளியானது.

அதேபோல் உறியடி விஜயகுமார் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ஃபைட் கிளப் திரைப்படம் இந்த வாரம் சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான நேரு தமிழில் 24 ஆம் தேதி ஆன நேற்று டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது.

Also Read: லியோ போல் அசிங்கப்பட முடியாது.. 2000 ஆர்டிஸ்ட்டுகளுக்கு கங்குவா டீம் செய்த வேலை

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் படங்களின் மொத்த லிஸ்ட்

மேலும் அகில் அக்கினேனி, மம்மூட்டி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த ஏஜென்ட் திரைப்படம் தமிழில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் சரத்குமார், சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நா நா’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்திலும், கண்ணகி திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் கான்செப்டில் வெளியாகி திரையரங்கை தெறிக்க விட்ட அயலான் திரைப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: விஜய் ரஜினிக்கு மட்டும் அள்ளிக் கொடுப்பீங்க.. இந்த விஷயத்தில் பொறாமையில் வரிஞ்சு கட்டி வரும் அஜித்

Trending News