முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வருகிறார்.ஏற்கனவே “சிக்மா படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அவர்,தற்போது ஹீரோவாகவும் களமிறங்க இருப்பதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஜேசன் சஞ்சய் நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை ‘டாடா’பட புகழ் கணேஷ் கே.பாபு இயக்கலாம் என்றும்,இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,துருவ் விக்ரமை நாயகனாக வைத்து உருவாக்கத் திட்டமிடப்பட்ட ஏழு பாடல்கள் கொண்ட கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது ஜேசன் சஞ்சய்க்காக அந்தக் கதை பரிசீலிக்கப்படுவதாகவும் வலைப்பேச்சின் மூலம் சில செய்திகள் கசிந்துள்ளன.
ஏற்கனவே முதல்வரின் மகன் என்பதால் ஜேசன் சஞ்சய் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.இந்தச் சூழலில் அவர் நடிப்பிலும் களமிறங்கினால் அது சினிமா ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தைப் பெறும்.இருப்பினும்,இந்தத் தகவல்கள் குறித்து படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.




