சமந்தா முதல் சாய் பல்லவி வரை.. டாப் ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

தென்னிந்திய திரை உலகில் இருக்கும் நடிகைகளை ரசிகர்கள் பெருமளவு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் டாப் நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா, திரிஷா, ராஷ்மிகா என கோலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் டாப் நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இப்போது இவரை திரிஷா என யாரும் அழைப்பதில்லை. குந்தவையாகவே தான் தெரிகிறார். அந்த அளவிற்கு தன்னுடைய 40 வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் இளம் நடிகைகளுக்கு எல்லாம் போட்டியாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் பிபிஏ பட்டப்படிப்பு படித்திருக்கிறார்.

Also Read: சமந்தாவை பற்றி பேசி உருகிய நாக சைதன்யா.. விவாகரத்தின் உண்மை காரணம் இதுதானாம்!

அதை போல் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் பிஏ இங்கிலீஷ் படித்துள்ளார். அதேபோல் தென்னிந்திய நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் சமந்தா பி.காம் படித்திருக்கிறார்.

அருந்ததி, பாகுபலி போன்ற படங்களில் ராணியாக தோன்றி இளசுகளின் மனதை கவர்ந்த அனுஷ்கா பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறார். அதேபோல் காஜல் அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் மாஸ் மீடியா படிப்பு படித்துள்ளனர்.

Also Read: மீண்டும் கெத்தாக ஜோடி போட்டு வந்து விக்கி-நயன்.. இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படங்கள்

மேலும் வாரிசு படத்தின் மூலம் தளபதி நாயகியாக ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தனா பிஏ ஜர்னலிசம் மற்றும் இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிப்பு படித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் பிஏ ஃபேஷன் டெக்னாலஜி படித்திருக்கிறார். அதை போல் பிரியா பவானி சங்கர் இன்ஜினியரிங் படித்துள்ளார்.\

இவர்களை மட்டுமல்ல டாக்டர் ஒருவரும் தென்னிந்திய துறையில் கதாநாயகியாக மாஸ் காட்டுகிறார். முதலில் டிவி சேனலில் நடன போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் பிறகு தற்போது கதாநாயகியாக சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல நம் சாய் பல்லவி தான். சாய் பல்லவி மருத்துவம் படித்துள்ளார்.

Also Read: கல்யாணம் ஆகாமலேயே 40 வயதில் திரிஷா சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு.. லியோ ஜோடினா சும்மாவா!