திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வெந்து தணிந்தது காடு படத்தின் முழு வரவு, செலவு ரிப்போர்ட்.. கோலிவுட்டை அசரவைத்த மேனன்

சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் சிம்பு கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முழுமையான வரவு-செலவு ரிப்போர்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐசரி கணேசன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ப்ரொடக்ஷனுக்காக 35 கோடி மற்றும் படத்திற்கான பப்ளிசிட்டிக்கு மட்டும் 2 கோடி, டிஸ்ட்ரிபியூஷன் செய்வதற்காக 1 கோடியும், இன்டர்ஸ்ட்காக 4 கோடியும் ஆக மொத்தம் படம் உருவாக்குவதற்காக 42 கோடி தனிப்பட்ட முறையில் செலவாகியுள்ளது.

Also Read: சிம்புவுடன் இணைந்த பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட அப்டேட்

இதைத் தவிர படத்தில் நடித்த கதாநாயகன் சிம்புவுக்கு 8 கோடியும், படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு 8 கோடியும் வாங்கி உள்ளார். சிம்பு இந்தப்படத்திற்கு கமிட் ஆகும்போது மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். ஆகையால் மாநாடு படத்திற்கு முன்பு சிம்பு என்ன சம்பளம் வாங்கினாரோ அதை வைத்துதான் வெந்து தணிந்த காடுகள் அதற்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.

ஒருவேளை மாநாடு படம் சூப்பர் ஹிட் கொடுத்த பிறகு வெந்து தணிந்தது காடு படத்திற்கு கமிட்டாகி இருந்தால் நிச்சயம் அவரது சம்பளம் உயர்ந்திருக்கும். இவர்களைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு 4 கோடியும், திரைக்கதை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு 30 லட்சமும், படத்தின் கதாநாயகி சித்தி இட்னானி 30 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

Also Read: கௌதம் மேனனுக்கு பைக், சிம்புக்கு என்ன தெரியுமா?. வாரி வழங்கும் ஐசரி கணேஷ்

இதைத்தவிர மற்ற நடிகர் நடிகைகளுக்கு 1 கோடியே 40 ஆயிரத்தை சம்பளமாக கொடுத்திருக்கின்றனர். இந்த வகையில் நடிகர் நடிகைகளுக்காக மட்டும் 22 கோடி செலவாகியுள்ளது. படம்  பிஸ்னஸ் ஆனது 11. 60 கோடி, படத்தை ரீமேக் செய்யும் உரிமையை பெற்ற ரெட் ஜெயின் மூவிஸ்க்கு கமிஷனாக 93 லட்சம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸான வெந்து தணிந்த காடு இதுவரை 60 கோடி வசூலைத் பாக்ஸ் ஆபீஸில் குவித்திருக்கிறார்.

திரையரங்குகளில் வெந்து தணிந்து காடுபடத்திற்கு மக்களிடம் ஆதரவு குறைவாக இருந்தாலும் சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ, ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் மூலமாக சுமார் 20 கோடி லாபத்தை தயாரிப்பாளருக்கு மட்டும் கொடுத்திருக்கிறது. மாநாடு படத்தின் வசூலை வெந்து தணிந்தது காடு முறியடிக்ககாவிட்டாலும் தயாரிப்பாளர் போட்ட காசுக்கு மேல் லாபம் கொடுத்திருக்கிது. இதை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பட குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார்.

Also Read: சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பீங்க எனக்கு தர மாட்டீங்களா.. கறாராகப் பேசி சம்பளத்தை உயர்த்திய சிம்பு

மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் எதிர்ப்பார்த்த லாபம் கிடைத்ததால் சிம்பு தன்னுடைய அடுத்த படத்திற்கு 8 கோடியில் இருந்து 35 கோடிக்கு உயர்த்தி கேட்கிறார். இது கொஞ்சம் ஓவர் என்றாலும் சிறுவயதிலிருந்தே சினிமாவில் வெற்றியை பார்ப்பதற்காக இருந்த சிம்புவுக்கு தற்போது நல்ல நேரம் வந்துள்ளது.

Trending News