வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஸ்வரூபம் எடுக்கும் ஜி பி முத்து-தனலட்சுமி பிரச்சனை.. ஆண்டவருக்காக காத்திருக்கும் ஆர்மி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதமாக மாறியுள்ளது. அதிலும் பொதுமக்களின் சார்பாக வீட்டுக்குள் நுழைந்திருக்கும் தனலட்சுமி ரசிகர்களின் மொத்த வெறுப்புக்கும் ஆளாகி வருகிறார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹீரோவாக இருக்கும் ஜிபி முத்துவுக்கு பொதுமக்களின் சப்போர்ட் முழுவதுமாக இருக்கிறது. அதனாலேயே அவருக்கு பிக் பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அவரின் ஆர்மியினர் கொந்தளித்து விடுகின்றனர். அந்த வகையில் தனலட்சுமி நேற்று அவரை தேவையில்லாமல் வம்பிழுத்து பிரச்சனை செய்தார்.

Also read:ஜி பி முத்துவை கார்னர் செய்யும் 4 போட்டியாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு துரத்த காத்திருக்கும் ஆர்மி

தற்போது கிளப் ஹவுஸ் ஆக மாறி இருக்கும் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு டீமும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகின்றனர். அதில் பாத்திரம் கழுவும் அணியில் இருக்கும் ஜி பி முத்து தன் வேலையை முடித்துவிட்டு மற்ற டீமில் உள்ளவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

இதை ஒரு குற்றமாக ஆயிஷா கேப்டனிடம் கூற, அதனால் அவர் வெளியில் இருக்கும் வாழைப்பழ பெட்டில் தங்க தேர்வு செய்யப்படுகிறார். அப்போது ஜி பி முத்து என்னுடைய வேலையை நான் சரியாக செய்து விட்டு தான் அடுத்தவர்களுக்கு உதவி செய்தேன். அதில் என்ன தப்பு, இது என்னுடைய விருப்பம் என்று வாதாடுகிறார்.

ஆனால் அவருக்கு எதிராக தனலட்சுமி ரொம்பவும் கோபத்துடன் பேசுகிறார். அது மட்டுமல்லாமல் நடிக்கிறீங்க போன்ற ஏக வசனங்களில் இறங்கி பேசுகிறார். ஒரு கட்டத்தில் ஜிபி முத்து நீ என் பொண்ணு மாதிரி என்று கூறி கண்கலங்குகிறார். இதுதான் நேற்றைய எபிசோடில் பெரும் பிரச்சனையாக பற்றி எரிந்தது.

Also read:ஷூட்டிங் ஸ்பாட்டையே அல்லோலப்படுத்தும் ஜி பி முத்து.. தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த அதிசயம்

அதிலும் தனலட்சுமி என்னை அவர் வா போ என்று மரியாதை இல்லாமல் பேசினார் என்று சீப்பான ஒரு காரணத்தை கூறினார். இதைப் பார்த்து தான் தற்போது ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். வயதில் மூத்தவர் வா போ என்று கூப்பிட்டதில் என்ன தவறு இதை எதற்கு அவர் பிரச்சனையாக கொண்டு செல்ல வேண்டும் என்று ஜிபி முத்துவுக்கு ஆதரவாக பலரும் பேசி வருகின்றனர்.

மேலும் தனலட்சுமி தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே இதுபோன்று தேவையில்லாமல் பிரச்சனை செய்வதாகவும், வார இறுதியில் கமல் இதற்கு நல்ல பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் மரியாதையை பற்றி பேசும் தனலட்சுமி ஜிபி முத்துவை பற்றி என்னவெல்லாம் புறம் பேசினார் என்பதையும் குறும்படமாக காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனால் இந்த வாரத்தில் ஆண்டவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read:நானா அப்படி செஞ்சேன், கதறி அழுத ஜிபி முத்து.. டிஆர்பி-காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

Trending News