வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நானா அப்படி செஞ்சேன், கதறி அழுத ஜிபி முத்து.. டிஆர்பி-காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் அனைத்தும் தற்போது ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஒன்று சோசியல் மீடியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சியில் ஜி பி முத்துவுக்கு தான் அதிக ஆதரவு இருந்து வருகிறது. அவர்தான் இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் அவரை ஏதோ ஒரு விதத்தில் காயப்படுத்துவது போன்று பேசுவது தற்போது பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read : சாம்பாரை வைத்து சண்டை மூட்டி விட்ட பிக்பாஸ்.. லூசுத்தனமா கேள்வி கேட்டு சிக்கிய அடுத்த ஜூலி

அதிலும் சோசியல் மீடியாவின் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த தனலட்சுமி ஜிபி முத்துவை ஒரு எதிரியாகவே பார்த்து வருகிறார். அது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவின் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அதில் அப்செட் ஆக இருக்கும் ஜி.பி முத்துவை போட்டியாளர்கள் சமாதானம் செய்கின்றனர். அப்போது அவர் நான் சாரி சொல்லியும் கூட என்னை பார்த்து முறைக்கிறார் என்று தனலட்சுமி பற்றி கூறுகிறார்.

எப்போதடா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த தனலட்சுமி உடனே சிலிர்த்துக்கொண்டு நான் திரும்பிப் பார்த்தது உங்களுக்கு முறைக்கிற மாதிரி இருக்கா, ரொம்ப நடிக்காதீர்கள் என்று ஆவேசமாக கூறுகிறார். உடனே ஜிபி முத்து பதில் பேச வருவதற்குள் என்ன எகிறிட்டு வரீங்க என்று தனலட்சுமி ஆக்ரோஷமாக கேட்கிறார்.

Also read : பிக்பாஸ் சீசன்-6 முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. கொண்டாடும் சோசியல் மீடியா

உடனே ஜிபி முத்து நீ என் பொண்ணு மாதிரி, வேணும்னா காலில் கூட விழுகிறேன் என்று கூறுகிறார் இதனால் பிக் பாஸ் வீடு பதட்ட நிலையில் இருக்கிறது. பிறகு போட்டியாளர்கள் அனைவரும் ஜி பி முத்துவை சமாதானம் செய்கின்றனர். ஆனாலும் அவர் கண் கலங்கி அழுகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனலட்சுமி என்னை வா போ ன்னு சொல்றாரு என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு பஞ்சாயத்தை கூட்டுகிறார்.

இப்படியாக அந்த ப்ரோமோ முடிகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேற்றங்கள் என்று ஜிபி முத்துவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே ஜி பி முத்துவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு தான் தனலட்சுமி இப்படி பேசுகிறார் என்று அவரின் நடவடிக்கையிலேயே தெரிகிறது. அந்த வகையில் இந்த பஞ்சாயத்தை வார இறுதியில் ஆண்டவர் எப்படி தீர்த்து வைப்பார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read : தலைவர் ஜிபி முத்து-வை அழவைத்த 2 போட்டியாளர்கள்.. அடுத்த எலிமினேஷன் இவங்கதான்

Trending News