வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2 ஹீரோக்கள் ரிஜெக்ட் பண்ணிய ஜென்டில்மேன் படம்.. ஷங்கரை மதிக்காமல் நிராகரித்த கமல்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் தற்போது வாய்ப்பு கிடைக்காதா என ஹீரோக்கள் தவித்து வருகிறார்கள். ஆனால் ஷங்கர் இயக்குனராக அறிமுகமாகிய ஜென்டில்மேன் படத்தில் நடிக்க அப்போது டாப் நடிகர்களாக இருந்த இரண்டு நடிகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதன் பின்பு கடைசியாக தான் இந்த படத்தில் அர்ஜுன் தேர்வாகி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அப்போது ஒரு நிலையான ஹிட் படம் கொடுக்க முடியாமல் தவித்து வந்த அர்ஜுனுக்கு ஜென்டில்மேன் படம் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதுமட்டுமின்றி அர்ஜுனின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதும் இந்த படம் தான்.

Also Read : வேள்பாரி முதலில் சூர்யாவுக்கான கதை இல்ல.. ஷங்கரின் கனவு பலிக்காமல் போன காரணம் இதுதான்

மேலும் அர்ஜுனுக்கு மீண்டும் முதல்வன் என்ற மிக பெரிய வெற்றி படத்தை ஷங்கர் கொடுத்திருந்தார். இந்நிலையில் முதலில் ஜென்டில்மேன் படத்தின் கதையை சரத்குமாரை மனதில் வைத்து தான் ஷங்கர் எழுதியுள்ளார். அந்தச் சமயத்தில் ஒரு பிசியான நடிகராக சரத்குமார் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆகையால் இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே சரத்குமார் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதைத்தொடர்ந்து ஷங்கர் கமலிடம் ஜென்டில்மேன் கதையைக் கொண்டு சென்றுள்ளார். அப்போது ஷங்கர் அறிமுக இயக்குனர் என்பதால் பத்தோடு 11 போல கதையாக தான் இது இருக்கும் என கமல் மறுத்துவிட்டார்.

Also Read : அர்ஜுனை தூக்கி நிறுத்திய 5 வெற்றி படங்கள்.. கீழே விழும் நேரத்தில் தாங்கிப் பிடித்த ஷங்கர்

அதன் பின்பு அர்ஜுன் இந்த படத்தில் நடித்து அசத்திவிட்டார். அதன் பின்பு தான் தமிழ் சினிமாவில் ஷங்கரை திரும்பிப் பார்த்தது. மேலும் கமலும் எப்படியாவது ஷங்கரின் ஒரு படத்தில் கண்டிப்பாக நடந்து விட வேண்டும் என கருதி உள்ளார். இதைத்தொடர்ந்து தான் ஷங்கர், கமல் கூட்டணியில் இந்தியன் படம் வெளியானது.

இந்தப் படமும் வேற லெவலில் ஹிட்டாக கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. லைக்கா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது.

Also Read : இந்தியன் 2 கதை இதுதான்.. கமலை வாட்டி வதைக்கும் ஷங்கர், சேனாதிபதிக்கு கொடுக்கும் நெருக்கடி

Trending News