புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நட்பு வட்டாரத்தில் இருந்து வெளியே வந்த சிம்பு.. கூடவே ஒட்டி இருக்கும் உயிர் நண்பன்

Simbu : சிம்புவுடன் எப்போதுமே ஒரு கலகலப்பான நட்பு வட்டாரம் இருந்து வருவது வழக்கம். ஆரம்பத்தில் பார்ட்டி, பப் என சிம்பு எப்போதும் இப்படியே சுற்றுகிறார் என அவர் மீது ஒரு தவறான அபிப்ராயம் இருந்து கொண்டிருந்தது. ஆனால் மாநாடு படத்திற்கு பிறகு மொத்தமாக சிம்பு மாறிவிட்டார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் மூலம் ஹிட் கொடுத்து சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அதுவும் தக் லைஃப் படத்தில் சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வது, கொடுத்த வேலையை செய்வது என பர்ஃபக்ட்டாக இருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் இப்போது அவர் தன்னுடைய நட்பு வட்டாரத்திலிருந்து வெளியே வந்து விட்டாராம். ஆரம்பத்தில் அவரை நெருங்க வேண்டும் என்றாலே சுற்றி அவர்கள் நண்பர்களை சந்தித்த பின்பு தான் சிம்புவிடம் பேசவே முடியுமாம்.

சிம்பு எடுத்த அதிரடி முடிவு

அந்தளவுக்கு நண்பர்களின் கட்டுப்பாட்டில் சிம்பு இருந்திருக்கிறார். ஆனால் சிம்புவுடன் ஒட்டியே அவரது உயிர் நண்பன் மகத் மட்டும் உள்ளாராம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர்தான் மகத்.

இவர் அஜித்தின் மங்காத்தா படத்தில் கூட நடித்திருப்பார். இவர்தான் இப்போது சிம்புவின் டேட் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாராம். அடிக்கடி துபாய் சென்று வருகிறாராம் மகத். ஏனென்றால் அடுத்ததாக சிம்பு தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கான சூட்டிங் துபாயில் நடக்க உள்ளதால் அதற்கான பேச்சுவார்த்தையில் தான் மகத் இறங்கி இருக்கிறாராம். சினிமாவில் சுழன்றி அடித்துக் கொண்டிருக்கும் சிம்புவுக்கு சீக்கிரம் கால் கட்டு போட்டால் அவரது ரசிகர்கள் இன்னும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

காலில் சக்கரம் கட்டி பறக்கும் சிம்பு

Trending News