புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஜீவானந்தம் விட்ட இடத்தை பிடிக்க பிளான் பண்ணிய கோபி.. சைலண்டாக பேச்சுவார்த்தை நடத்திய சன் டிவி

Sun Tv: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடித்து மக்களிடம் சிம்ம சொப்பனமாக ஜொலித்து வருகிறது. இதற்கு பெரிய தூண்களாக இருந்தது ராடன் மீடியாவான ராதிகா சித்தி என்ற சீரியல் மூலம் சூடு பிடிக்க வைத்தார். இவருக்கு அடுத்தபடியாக மெட்டிஒலி என்ற தரமான நாடகத்தை கொடுத்து சன் டிவிக்கு அடிமையாக்கியது கோபி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பரிச்சயமான திருமுருகன்.

இவர்களைத் தொடர்ந்து அடுத்தபடியாக கோலங்கள் என்ற நாடகத்தை ஆயிரம் எபிசோடுக்கு மேலாக ரசிக்கும் படியாக கொடுத்த இயக்குனர் தொல்காப்பியன் மற்றும் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான திருச்செல்வம். இப்படி இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கே அதிகரித்து விட்டார்கள்.

மெட்டி ஒலி 2க்கு குட் பாய் சொன்னா கோபி

அந்த வகையில் ராதிகா சமீபத்தில் சித்தி 2 மூலம் மறுபடியும் நுழைந்தார். ஆனால் சில காரணங்களால் ராதிகாவால் தொடர்ந்து நடிக்க முடியாததால் அப்படியே பின் வாங்கி விட்டார். பிறகு திருச்செல்வம் மூலம் எதிர்நீச்சல் நாடகம் வந்தது. அதே மாதிரி எதிர்பார்த்த அளவுக்கு எதிர்நீச்சல் சீரியலை ஆகோ ஓகோ என்று மக்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

ஆனால் யார் கண் பட்டுச்சோ திடீரென்று நாடகம் தடம் புரண்டு போனதால் அவசர அவசரமாக கடந்த வாரத்தில் முடித்து விட்டார்கள். இதனால் இந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காக சன் டிவி சேனலிடம் இருந்து மெட்டி ஒலி நாடகத்தை எடுத்த திருமுருகனுக்கு அழைப்பு போயிருக்கிறது. அதன்படி கூடிய விரைவில் புத்தம் புது கதையுடன் கோபி மறுபடியும் இயக்குனராகவும் ஹீரோவாகவும் என்டரி கொடுக்கப் போகிறார்.

ஆனால் இப்போதைக்கு மெட்டி ஒலியின் இரண்டாம் பாகம் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் புது அத்தியாயத்தை கையில் எடுக்கலாம் என்று பிளான் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் கோபி கதையை பொருத்தவரை குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு ஒற்றுமையான குடும்ப காவியமாக தான் இருக்கும். இதில் எந்தவித வில்லத்தனமும் இல்லாமல் செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை என்று பார்ப்பதற்கே சுவாரசியமாக இருக்கும்.

அதனால் கூடிய விரைவில் சன் டிவியில் இயக்குனர் திருமுருகனின் படைப்புகளை பார்க்கலாம். இதை பற்றி பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாக முடிந்த பிறகு சன் டிவி சேனலிடம் இருந்து தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News