Sivakarthikeyan- Aniruth: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் மதராஸி படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் அவர்களுடைய நட்பை காட்டும் வகையில் அழகாக பேசினார்கள். அப்பொழுது அனிருத், இந்த படத்தின் டிரைலரில் கடைசியில் sk சொன்னது இது என் ஊரு சார் நான் வந்து நிற்பேன் என்று இருக்கும்.
ஆனால் நான் இப்பொழுது சொல்கிறேன் இது என்னுடைய sk நான் எப்போதுமே வந்து நிப்பேன்டா என்று சொல்லி சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்து விட்டார். அதே மாதிரி சிவகார்த்திகேயன் பேச வரும் பொழுது அனிருத் பற்றி ஒரு விஷயத்தை சொல்லி இருந்தார். அதாவது ஏன் இன்னும் அனிருத் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கிறார் என்று நிறைய கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
நாங்களும் இதே கேள்வி அவரிடம் கேட்டிருக்கிறோம், அனிருத் சார் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கள். எங்களுக்கு மட்டும் எட்டு மணி ஆகிவிட்டால் எங்க இருக்கீங்க, எப்போ வரிங்க என்று போன் வந்து விடுகிறது. ஆனால் இவர் எட்டு மணிக்கு தான் ஜாலியா எழுந்திருப்பாரு, இப்பொழுது ஒர்க் பண்ணுவோமா என்று கேட்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கும். அப்பொழுது நான் கேட்டு இருக்கேன் ஏன் இன்னும் நீங்கள் கல்யாணம் பண்ணாமல் இருக்கீங்க என்று.
அதற்கு அனிருத் விடுங்க ஜாலியா இருந்துட்டு போலாம் என்று சொல்லுவார். ஆனால் அவர் ஜாலியாக இருந்தால் தான் எனக்கு ஹிட் பாட்டு கிடைக்கும். எனக்கு ஹிட் பாட்டா, அனிருத்துக்கு கல்யாணமா என்று கேட்டால் நமக்கு ஹிட் பாட்டு தான் முக்கியம். அதனால் அவருக்கு எப்பொழுது தோன்றுதோ அப்பொழுதே கல்யாணம் பண்ணட்டும் என்று அனிருத்தின் கல்யாணத்துக்கு மறைமுகமாக விளக்கம் கொடுத்துவிட்டார்.
ஆனால் ஒரு பக்கம் இதையெல்லாம் கேட்ட ரசிகர்கள் அனிருத்துக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இன்னும் சில பேர் அவர் கல்யாணம் தான் பண்ணவில்லை, ஆனால் ரிலேஷன்ஷிப்பில் இருக்கத்தான் செய்கிறார் என்று நக்கலாக கமெண்ட் பண்ணி வருகிறார்கள். ஏற்கனவே சமீபத்தில் இவரை சுற்றி நிறைய வதந்திகள் வந்தது. அதனால் எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூடிய சீக்கிரத்தில் அனிருத்தின் கல்யாணத்தை எதிர்பார்க்கலாம்.