புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அப்பவே வடிவேலுவை தட்டி வைத்த கவுண்டமணி.. வளர்த்து விட்டவர் காலையே வாரிவிட்ட வைகைப்புயல்

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிய வைகைப்புயல் வடிவேலுக்கு வாயில சனி வந்தது போல், சில வருடத்திற்கு முன்பு ஓவராக ஆடியதால் தன்னுடைய மார்க்கெட்டை இப்பொழுது சுத்தமாகவே இழந்து தவிக்கிறார். ஆனால் இப்போது இருக்கும் வடிவேலுவை 30 வருடத்திற்கு முன்பே நகைச்சுவை ஜாம்பவானான கவுண்டமணி கணித்து விட்டார்.

இந்த பையன் சரி வர மாட்டான் என கவுண்டமணி, வடிவேலுவை பல படங்களில் நிராகரித்துள்ளார். அப்படி கவுண்டமணி வேண்டாம் என்று சொல்லி கேப்டன் விஜயகாந்த் அவர்கள், இல்லை சின்ன பையன் வளரட்டும் என வாய்ப்பு கொடுத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு ஆர்பி உதயகுமார் இயக்கத்தில் கேப்டன் நடித்த படம் சின்ன கவுண்டர். அதில் வடிவேலு நடிக்க வேண்டாம் என கூறியிருக்கிறார் கவுண்டமணி.

Also Read: இந்த மாதம் ரிலீசுக்கு காத்திருக்கும் 8 படங்கள்.. எதிர்பார்ப்பில் உதயநிதியின் மாமன்னன்

இல்லை ஒரு சின்ன கதாபாத்திரம் கொடுப்போம் என விஜயகாந்த் தான் ஆர்வி உதயகுமார் இடம் பேசி அவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதனால் சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலு நடிப்பதற்கான வாய்ப்பு, விஜயகாந்த் மூலம் கிடைத்தது. அந்த வாய்ப்பு மூலமாக தான் அவருக்கு தேவர் மகன் படம் கிடைத்தது. அந்தப் படத்திற்குப் பிறகு வடிவேலுக்கு ஏறுமுகம் ஆரம்பித்தது.

அடுத்ததாக கவுண்டமணி, செந்திலை தூக்கி வீசும் அளவுக்கு வடிவேலு தமிழ் சினிமாவில் டாப் நகைச்சுவை நடிகராக வளர்ந்தார். அவர் வளர்ந்ததோடு அவருடைய குசும்புக்கார வாயும் வளர்ந்து விட்டது. அதுவும் சினிமாவில் வளர்த்துவிட்ட கேப்டனையே அரசியல் மேடையில் வெளுத்து வாங்கினார். அந்த சமயத்தில் விஜய்காந்திற்கு எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பும் கிடைத்தது.

Also Read: தேவர்மகன் படத்திற்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. உதயநிதியின் அரசியலை பற்றி பேசிய வடிவேலு

விஜயகாந்த் மட்டுமல்ல முன்னாள் முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெ ஜெயலலிதா என இவர் பகைத்துக் கொண்டதெல்லாம் பெரிய இடம் தான். அது மட்டுமல்ல சினிமாவிலும் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் ஓவர் திமிரு காட்டியதால் அவரை சில வருடங்களாக நடிக்க கூடாது என ரெட் கார்ட் கொடுத்து ஒதுக்கி வைத்து விட்டனர்.

தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய வடிவேலுவுக்கு இன்னும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் சினிமாவில் வளர்த்துவிட்டதும் கேப்டனையே வாய்க்கு வந்தபடி பேசியது தான் என பிரபலங்கள் பலரும் கூறுகின்றனர். தற்போது வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Also Read: வடிவேலுவை கேள்வி கேட்டு டென்ஷன் செய்த மீடியா.. சமாளிக்க முடியாமல் மைக்கோடு ஓடிய வைகை புயல்

இந்த படத்தில் வடிவேலு குணச்சித்திர கதாபாத்திரத்தில் ரொம்பவே சீரியஸாக நடித்திருக்கிறார். இவ்வளவு நாள் காமெடி நடிகராக பார்த்த வடிவேலுவை இதில் வித்தியாசமாக பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு வடிவேலுவின் மார்க்கெட் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அப்படி நடந்தால் அவருடைய வாயை மட்டும் குறைத்துக் கொண்டு, வாலை சுருட்டி கொண்டிருக்க வேண்டும் என்றும் விமர்சிக்கின்றனர்.

Trending News