செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணியா!. என்ன கேரக்டர் தெரியுமா?

சிவகார்த்திகேயன் தொடர்ந்து சினிமாவில் மாஸ் பண்ணி வருகிறார். டாக்டர், டான் எனத் தொடர் வெற்றியால் வசூல் மன்னன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன், சத்யராஜ் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் படம் வெளியாவதால் கண்டிப்பாக நகைச்சுவையுடன் இருக்கும். சிவகார்த்திகேயன் தற்போது பிரபல நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணியுடன் இணைய உள்ளார்.

80,90 களில் வெளியான பெரும்பான்மையான படங்களில் கவுண்டமணியின் காமெடி இடம் பெற்றிருக்கும். டைமிங்கில் காமெடி செய்வதில் கவுண்டமணிக்கு இணை யாருமில்லை. இந்நிலையில் சினிமாவில் மிகப்பெரிய பிரேக் எடுத்த கவுண்டமணி ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் கவுண்டமணியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பெரியப்பா கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க கவுண்டமணி சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அதற்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி நடிப்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. இப்படத்தை மடோனா அஸ்வின் இயக்கயுள்ளார்.

இந்நிலையில் மாவீரன் படத்தில்தான் கவுண்டமணி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் படங்களில் நகைச்சுவை அதிகமாக இருக்கும் நிலையில் நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி சேர்ந்துள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Trending News