புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இலங்கை அணி மீது மொத்தமா இடியை இறக்கிய அரசாங்கம்.. இந்திய அணியால் ஏற்பட்ட விபரீத நிலமை

அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த இலங்கை அணிக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. விளையாடிய 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சமீப காலமாக இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி அடையாவிட்டாலும் மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், பள்ளி குழந்தைகள் போல் விளையாடும் வீரர்களை உலகக் கோப்பை போட்டிக்கு விளையாடுவதற்கு அனுப்பி ஒட்டுமொத்த நாட்டையே அவமானப்படுத்தி விட்டார்கள் என கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியுடனான தோல்வி அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை புரட்டிப் போட்டது. வெறும் 15 ஓவர்களை சந்தித்து 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இலங்கை. இந்திய அணி அந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களில் அடித்து துவம்சம் பண்ணியது.

இப்பொழுது அதே போல் உலக கோப்பையிலும் ஒரு படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியுடன் 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஒட்டுமொத்தமாக சரணடைந்தது. அந்த அணி தோற்றால் கூட பரவாயில்லை ஜெயிப்பதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை என்பது இலங்கை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உலகக் கோப்பை போட்டியிலும் வெறும் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையெல்லாம் சகிக்க முடியாமல் இப்பொழுது இலங்கை அரசாங்கம் அதிரடியாக ஒட்டுமொத்த கிரிக்கெட் வாரியத்தையும் கலைத்தது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளிவந்து இலங்கை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை அமைக்க உள்ளது. மற்ற நாட்டுடன் இலங்கை அணி தோற்றாலும் அது ஒரு கௌரவ தோல்வியாக இருந்தது. ஆனால் இந்திய அணியுடன் விளையாடத் தெரியாதவர்கள் போல் விளையாடியதால் தான் இப்பொழுது பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

Trending News