திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலுடன் போட்டி போடும் ஜி பி முத்து.. டாப் ஹீரோயின்களுக்கு போடும் ஸ்கெட்ச்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவருக்காக மட்டுமே பார்க்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அதனால்தான் வார இறுதி நாட்களில் விஜய் டிவியின் டிஆர்பி எக்கச்சக்கமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கமல் மட்டும்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

போட்டியாளர்களிடம் கனிவாக பேசுவதில் இருந்து பிரச்சனையை கண்டிப்புடன் கையாளும் விதம் என அனைத்திலும் ஆண்டவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரை தவிர வேறு யாராலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்னும் லெவலுக்கு அவர் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த சீசனில் கமல் மற்றும் ஜிபி முத்துவின் காம்போ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

Also read:பப்ளிசிட்டிக்காக தான் ராபர்ட் மாஸ்டரை யூஸ் பண்னேன்.. உண்மையைப் போட்டு உடைத்த காதலி

இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே ஜி பி முத்து தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் அனைவரையும் இம்ப்ரஸ் செய்து விட்டார். அதேபோல பெரிய நடிகர் என்ற எந்த பயமும் இன்றி எதார்த்தமாக அவர் கமலிடம் உரையாடியது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சியிலும் அவருடைய பேச்சு படு சுவாரசியமாக இருந்தது.

அதிலும் ஆதாம் பற்றி பேசிய ஆண்டவரிடம் ஆதாமா, எங்க இருக்காரு என்று அவர் கேட்டது செம ரகளை. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவிலும் அவரின் அட்ராசிட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் பிக் பாஸ் ஜி பி முத்துவுக்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறார்.

அதாவது போஸ்ட் பாக்ஸுக்குள் அவருக்காக முருங்கைக்காய் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஜிபி முத்து வீட்டில் உள்ள கேமரா முன்பாக எனக்கு முருங்கைக்காய் சாம்பார் வேண்டும். அதனால் முருங்கைக்காய் அனுப்பி வையுங்கள் என்று கதறிக் கொண்டிருந்தார்.

Also read:சாண்டி மாஸ்டருடன் இணைந்த ஜிபி முத்து.. குத்தாட்டம் போட வைத்த வீடியோ

அதனால் பிக் பாஸ் வார இறுதியில் அவருக்கு முருங்கை காய்களை அனுப்பி வைத்திருக்கிறார். அதை பார்த்து சந்தோஷப்பட்ட ஜிபி முத்துவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நீங்கள் ஹீரோவானால் எந்த நடிகையுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிபி முத்து சொன்ன பதில் தான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

அதாவது அவர் எனக்கு நயன்தாரா மற்றும் சிம்ரனுடன் நடிக்க ஆசை என்று கூறினார். இதை பார்த்து கமலே வாயடைத்து போனார். அதன் பிறகு வீட்டில் உள்ள பெண்களில் யாரை ஹீரோயினாக தேர்ந்தெடுப்பீர்கள் என்று கமல் கேட்டார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஜிபி முத்து திரு திருவென முழித்துக் கொண்டிருப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதற்கு அவர் என்ன பதில் சொல்லி இருப்பார் என்பதை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read:ஆட்டத்தை நாசுக்காக ஆரம்பிக்கும் ஆண்டவர்.. கவுண்டர் போட்டு கலாய்த்த ஜி பி முத்து

Trending News