செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஷங்கரை மிஞ்சிய பிரம்மாண்டம்.. மொத்த கெட்டப்புகளையும் மறைத்து வெளியிட்ட சர்தார் படக்குழு

இதுவரை ஷங்கர் எடுத்த படங்கள் அனைத்தும் மிக பிரமாண்டமாக இருந்து அவரை பிரமாண்ட இயக்குனர் என்று கூற வைத்தார். ஆனால் தற்போது ஷங்கர் படத்தை மிஞ்சும் அளவுக்கு கார்த்தி நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் சர்தார் திரைப்படம் திரையரங்கில் பிரமாண்டத்தை காட்டி உள்ளது.

இந்த படத்தில் இவர் 16 கெட்டப்பில் நடித்திருக்கிறார் என்பதை படத்தைப் பார்த்த பிறகுதான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை டிரெய்லரில் கண்டுபிடிக்காத படி சர்தார் படத்தின் ட்ரெய்லரில் அனைத்தையும் மறைத்து விட்டனர்.

Also Read: அதிக ஹைப் கொடுத்து பிளாப்பான கெட்டப் சேஞ் படங்கள்… தோல்வி பயத்தில் கார்த்தி

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராசி கண்ணா, ராஜீஷா விஜயன், லைலா, இளவரசு, முரளி சர்மா, முனீஷ்காந்த் ராமதாஸ் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

நாட்டின் ரகசிய ஒற்றனாக அப்பா கார்த்தியும், போலீசாக மகன் கார்த்தியும் என இரட்டை வேடங்கள். இந்த படத்தில் கார்த்தி 16 கெட்டப் சேஞ் லுக்கில் வந்திருக்கிறார். இது கார்த்தி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் ஷங்கர் படங்களை மாதிரி மிக பிரம்மாண்டமாக இருக்கிறது. இதனால் ரசிகர்களிடமும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

Also Read: 2 படத்துகுமே வரும் ஆப்பு.. வெடிக்க ஆரம்பித்தது தீபாவளி வேட்டு

மேலும் கார்த்தி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்பதும் கூடுதல் சிறப்பு. எனவே 16 கெட்டப்பில் சர்தார் படத்தில் தன்னுடைய வித்தியாசமான முயற்சி வெளிக்காட்டி இருக்கும் கார்த்தி, இதுவரை படங்களில் கெட்டப் சேஞ்ச் செய்த மற்ற நடிகர்களை எல்லாம் ஓரம் கட்டி உள்ளார்.

ஆகையால் தற்போது ரசிகர்களின் மத்தியில் ஹைப் உடன் இருக்கும் சர்தார், இனிவரும் நாட்களிலும் இதேபோன்று பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: நம்பர் ஒன் ட்ரெண்டிங் வர உயிரை பணயம் வைக்கும் கார்த்தி.. சரவெடியாய் வெளியான சர்தார் ட்ரெய்லர்

Trending News