தமிழ் சினிமாவில் ஒரு படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே அதன் வியாபாரம் கவனம் பெறுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தற்போது விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’படம் குறிப்பிடத்தக்க வியாபாரத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னத்தின் சகோதரர் சீனிவாசனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் தயாராகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் முக்கியக் கேரக்ட்ர்களில் நடிக்கின்றனர்.குறிப்பாக, பள்ளிப் பருவத்தில் காதலர்களாக அறிமுகமாகும் இருவரும்,பின்னர் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெற்றோராகும் கேரக்ட்ர்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கேரக்ட்ர் அமைப்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையடைவதற்கு முன்பே அதன் வியாபாரம் தொடர்பான தகவல் வெளியாகி திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது.அதன்படி,‘இஞ்சி வெல்லம்’படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் 20 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்,படத்தின் ஆடியோ உரிமையும் 10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வெளியீட்டிற்கு முன்பாகவே டிஜிட்டல் மற்றும் இசை உரிமைகள் வாயிலாக மட்டும் இப்படம் 30 கோடி வியாபாரத்தை எட்டியுள்ளது.விஜய் சேதுபதி, சாய் பல்லவி கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் ,தியேட்டர் ரிலீசையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.




