Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அறிவுக்கரசி ஆட்டத்துக்கு ஒத்து ஊதும் புது மல்லுவேட்டி.. பரோல் பாண்டியன் குணசேகரனுக்கு அடித்த ஜாக்பாட்

அறிவுக்கரசி ஆட்டத்துக்கு ஒத்து ஊதும் புது மல்லுவேட்டி.. பரோல் பாண்டியன் குணசேகரனுக்கு அடித்த ஜாக்பாட்

குணசேகரன் பழைய பாச்ஜா பலிக்காததால் இப்பொழுது புது ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார். கடவுளே மணிவிழாவை நிறுத்தியது போல் தாரா ரூபத்தில் நின்று போனது அந்த பங்க்ஷன். வழியில்லாமல் சர்வமும் அடங்கி போய் நிற்கிறார் குணசேகரன்.தந்திரதாரியாக கையில் புது ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார். […]

குணசேகரன் பழைய பாச்ஜா பலிக்காததால் இப்பொழுது புது ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார். கடவுளே மணிவிழாவை நிறுத்தியது போல் தாரா ரூபத்தில் நின்று போனது அந்த பங்க்ஷன். வழியில்லாமல் சர்வமும் அடங்கி போய் நிற்கிறார் குணசேகரன்.தந்திரதாரியாக கையில் புது ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.

கொஞ்ச நாட்களாக சத்தமே இல்லாமல் இருந்த அறிவுக்கரசி ஜெயிலிலிருந்து காயங்களோடு வெளிவந்து விட்டார். வந்தவர் நேராக குணசேகரன் வீட்டிற்கு வந்து தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். தர்ஷன் கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என அடாவடி செய்கிறார்.

இதற்கு எல்லாத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டது குணசேகரன் தான். இது தம்பிகள் யாருக்கும் தெரியாது. அறிவுக்கரசியை வைத்து புது நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். குணசேகரன் அடிக்கும் மேலத்திற்கு தகுந்தாற்போல் ஆட்டம் போடுகிறார் அறிவு.

மணிவிழா சோலி முடிந்ததை அடுத்து குணசேகரன் இப்பொழுது தர்ஷன் கல்யாணத்தை வைத்து கலேபரம் செய்து வருகிறார். அவருக்கு அசுர பலமாய் மாமனார் சேதுராமன் நிற்கிறார். வேஷதாரியாய் மாமனார் முதல் தம்பிகள் அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.

குணசேகரன் எனக்கு பரோல் வேண்டாம் மீண்டும் ஜெயிலுக்கு போகிறேன் என உச்சகட்ட நாடகத்தை அரங்கேற்றினார் அதிர்ச்சி அடையும் தம்பிகளுக்கு, வக்கீல் ரூபத்தில் வருகிறது நற்செய்தி.குணசேகரனுக்கு ஜாமின் கிடைக்கப் போகிறது,ரேணுகா மற்றும் நந்தினி இருவரும் கோட்டிற்கு வரக்கூடாது எனவும் குண்டைத் தூக்கிப் போடுகிறார் வக்கீல்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.