Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு திருவிழா நிகழ்ச்சி கலைகட்ட போகிறது. அத்துடன் அப்பத்தாவும், குணசேகரனுக்கு எதிராக காய் நகர்த்தப் போகிறார். இதன் மூலம் தன்னுடைய போராட்டத்திற்கு ஒரு விடிவு காலம் பிறந்துவிடும் என்ற நம்பிக்கையில் நான்கு மருமகள்களும் திருவிழா நிகழ்ச்சிக்கு போகிறார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இன்னும் கூடுதல் சிறப்பாக குணசேகரனை கொண்டு வந்திருக்கிறார்கள். இவர் ஆரம்பத்தில் வந்த பொழுது ரொம்பவே கொடூரமாக பேசுகிறார் நடிக்கிறார் என்று பல எதிர்மறையான கருத்துக்கள் வந்தது. அதனை தொடர்ந்து தற்போது வந்த குணசேகரன் கொஞ்சம் சாந்தமாகவும் பேச்சிலும் நடிப்பிலும் தெளிவு இருப்பது போல் இருக்கிறது.
அதனால் போகப் போக இவருடைய நடிப்பு பார்ப்பவர்களை கவர்ந்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் திருவிழாவில் ஜீவானந்தத்தின் கதையை முடித்து விட வேண்டும் என்று கதிர் பலத்த ஏற்பாடுடன் போய்க் கொண்டிருக்கிறார். போகும்போதே இவருக்கு ஒரு போன் வருகிறது. அதில் இவருடைய வீக்னஸ் பாயிண்டை புரிந்து கெளதம் இவருக்கு ஸ்கெட்ச் போட்ட மாதிரி தெரிகிறது.
அந்த வகையில் இந்த பிளானில் கதிர் சொதப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் அந்த பெண்ணை தேடி போகும் போது கௌதம் இவரைப் வச்சு செய்யப் போகிறார். அதே மாதிரி ஜீவானந்தம் கதிரை வைத்து குணசேகரனை மடக்க போகிறார். ஆக மொத்தத்தில் இந்த திருவிழாவில் ஜீவானந்தம் கௌதம் சரியான சம்பவம் செய்யப் போகிறார்கள்.
அடுத்தப்படியாக அப்பத்தா ஆசைப்பட்ட மாதிரி அவருடைய சொத்து நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த போகிறார். இதற்கிடையில் யார் யார் பலிகடாக ஆகப்போகிறார்கள் என்பதுதான் ட்விஸ்ட்டாக மாறப்போகிறது. ஒருவேளை குணசேகரன் கதாபாத்திரம் வேலராமமூர்த்திக்கு செட்டாகவில்லை என்பதால் அவருடைய கதையை இதோட க்ளோஸ் பண்ணுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஆக மொத்தத்தில் ஜீவானந்தம் மற்றும் கௌதம், கதிரையும் குணசேகரன் பொறிவைத்து பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள் ஆசைப்பட்ட மாதிரி சுயமாக சம்பாதித்து முன்னேறுவதற்கும் இது வாய்ப்பாக மாறப்போகிறது. ஏனென்றால் இந்த ஒரு விஷயத்தை வைத்து தான் மக்கள் மனதில் மறுபடியும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற யுத்தியை எதிர்நீச்சல் டீம் கையில் எடுத்திருக்கிறார்கள்.