வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஜனனி அப்பாவை விட குணசேகரன் எவ்வளவோ பரவாயில்லை.. ஆட்டத்தை கலைக்க வரும் வாசு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் ரொம்பவே மூர்க்கத்தனமாக தன் பெத்த மகளிடம் நேற்று நடந்து கொண்டது வன்மையாக கண்டிக்கும் அளவிற்கு இருக்கிறது. இந்த அளவிற்கு ஒரு வன்மத்தை காட்டி தான் நாடகத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அதற்கு உதாரணமாக மறைந்த மாரிமுத்துவின் நடிப்பை சொல்லலாம்.

அவர் இதே கதாபாத்திரமான குணசேகரன் கேரக்டரில் வில்லனாக நடித்தாலும் அனைவரும் ரசிக்கும்படியாக தான் இருந்தது. ஆனால் தற்போது வந்திருக்கும் வேலராமமூர்த்தி நடிப்பு எரிச்சல் ஊட்டும் விதமாகவும் பார்க்கவே நெஞ்செல்லாம் பதறுகிறது என்று சொல்லும் அளவிற்கு வன்மத்தை மட்டுமே கொட்டி நடிக்கிறார்.

அத்துடன் இதுவரை மனைவியும் மற்ற பெண்களை மட்டும் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் தற்போது தர்ஷினியையும் ரொம்பவே சீண்ட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் பாக்சிங் பண்ண கூடாது என்பதற்காக அந்த பெண்ணை ரொம்பவே இழிவு படுத்தி பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தது சகிக்க முடியாத விஷயமாக இருக்கிறது.

Also read: டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சிங்கபெண்ணிடம் தோற்றுப் போன எதிர்நீச்சல்

இப்படி எல்லாம் ஒரு காட்சிகள் வைத்தால் எப்படி குடும்பத்துடன் இருந்து இந்த நாடகத்தை பார்க்க முடியும் என்று சொல்லும் அளவிற்கு தான் தற்போது கதை நகர்ந்து வருகிறது. போதாக்குறைக்கு காதலித்து வீட்டை எதிர்த்து 35 வருடமாக வாழ்ந்த வாழ்க்கையை மறந்து விட்டு சொத்துக்காக நாச்சியப்பன் செய்யும் வக்கிர புத்தியை பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கிறது.

அதிலும் தாலியை கழட்டி கொடுக்க வேண்டும் என்று நாச்சியப்பன் குடும்பத்தில் சொல்லி துன்புறுத்துவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்தும் கண்டும் காணாமல் போல் நாச்சியப்பன் இருப்பது, இதற்கு இந்த குணசேகரனே எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு நாச்சியப்பன் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

ஆனாலும் இந்த விஷயம் கேள்விப்பட்ட பிறகு இதை தடுப்பதற்காகவும் சரியான விதத்தில் தட்டிக் கேட்கும் விதமாகவும் வாசு என்டரி கொடுக்கப் போகிறார். சும்மாவே வாசு நியாயத்திற்காகவும் சரியான காரியங்களுக்காகவும் தான் போர் கொடியை தூக்குவார். இப்படி இருக்கும் பட்சத்தில் தன்னுடைய குடும்பத்தில் இப்படி ஒரு கேவலமான ஒரு ஆள் இருக்கிறார் என்று தெரிந்ததும் மொத்த ஆட்டத்தையும் கலைப்பதற்கு வருகிறார்.

Also read: ஆதியை அப்பாவாக ஏற்க மறுக்கும் தமிழ்.. துடிக்கும் இரு இதயம், பாரதி எடுக்கப் போகும் முடிவு என்ன?

Trending News