ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

என்னதான் ஆட்டம் போட்டாலும் இனி குணசேகரன் டம்மி தான்.. ஜீவானந்தம் செய்யப்போகும் மிகப்பெரிய உதவி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பையும் தாண்டி விறுவிறுப்பாக அமைந்து வருகிறது. இந்த ஒரு நாடகத்தை பார்ப்பதற்காகவே எப்பொழுது 9.30 மணி ஆகும் என்று அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு கதையும், கதாபாத்திரங்களும் பார்ப்பவர்களுக்கு பிடித்து போய்விட்டது.

இதுவரை குணசேகரன் அந்த வீட்டில் இருக்கும் பெண்களை மட்டும் ஏமாற்றிய நிலையில், இவரை அண்ணன் மட்டும் இல்லாமல் கடவுளாகவே பார்த்து வரும் ஞானத்தையும் முட்டாளாக்கிக் கொண்டு வருகிறார். அதாவது இவருக்கு பக்கவாதம் வந்துவிட்டது என்று நினைத்து ஞானம் ரொம்பவே கண்கலங்கி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து குணசேகரனுக்காக செய்து வருகிறார்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

ஆனால் இவர் தம்பியை ஏமாற்றி இவருடைய காரியத்தை ஜெயிக்க நினைக்கிறார். மேலும் ரேணுகாவிற்கு புது விடிவு காலம் பிறந்து விட்டது. அந்த வகையில் பள்ளிக்கூடத்தில் பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் செய்யப் போகிறார். இதன் மூலமாக ஞானம் திருந்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

இப்படி ஒவ்வொருத்தரும் அவர்களுடைய சம்பாத்தியத்தை நிலை நிறுத்திக் கொண்டு வருகிறார்கள். இனி குணசேகரன் என்னதான் ஆட்டம் போட்டாலும் டம்மியாகி தான் சோளக்காட்டு பொம்மையாக இருக்கப் போகிறார். வாய் மட்டும் இல்லைனா நாய் தூக்கிட்டு போயிடும் என்று சொல்வதற்கு ஏற்ப குணசேகரன் வாயை வைத்துக்கொண்டு பிழைத்து வருகிறார்.

Also read: நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.. அடேங்கப்பா ஆணாதிக்கத்திற்கு ஜாஸ்தி தான்

மற்றபடி இவர் உண்மையிலே டம்மி பீஸ் தான் என்று ஒவ்வொரு எபிசோடுலையும் காட்டி வருகிறார். அடுத்தபடியாக ஈஸ்வரின் அப்பா சொத்து விஷயமாக சொந்த ஊருக்கு ஈஸ்வரியை கூப்பிட்டு போகிறார். அங்கே இவருக்கு இருந்த நிலப் பிரச்சினையை சமாளிப்பதற்காக ஜீவானந்தம் வருகிறார். அப்பொழுது ஈஸ்வரியும் ஜீவானந்தமும் சந்திக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இதன் மூலம் ஈஸ்வரிக்கு, ஜீவானந்தம் யார் என்ற உண்மையும் தெரிந்துவிடும், இவர்தான் முன்னாள் காதலன் என்பதும் புரிந்துவிடும். இதற்கு அடுத்து ஈஸ்வரி, ஜீவானந்தத்திற்கு சப்போர்ட் செய்யப் போகிறாரா? அல்லது கட்டின புருஷன் குணசேகரன் கெட்டவனாக இருந்தாலும் அவர் பக்கத்தில் நிற்கப் போகிறாரா என்பது தான் சுவாரஸ்யமாக இருக்க போகிறது.

Also read: ஆதிரை தலையில் இடியை இறக்கிய கரிகாலன்.. ஈஸ்வரிக்காக எதையும் செய்யத் துணிந்த ஜீவானந்தம்

Trending News