வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

குணசேகரனை அடக்கி ஆளும் தூக்குதுரை.. கைக்கு எட்டினதை தவிர விட்டு சொதப்பிய மருமகள்கள்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினி எங்கே இருக்கிறார் என்கிற விஷயத்தை ஓரளவுக்கு குணசேகரன் வீட்டுப் பெண்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அந்த வகையில் தர்ஷினியை அடைத்து வைத்த இடத்திற்கு போய் தர்ஷினி இங்கேதான் இருந்திருக்கிறார் என்கிற விவரத்தையும் கண்டறிந்து விட்டார்கள்.

ஆனால் இதற்கு இடையில் தர்ஷினி, அந்த கும்பலிடம் இருந்து தப்பித்துப் போக வேண்டும் என்று முயற்சி எடுத்து ஓடிப் போய்விட்டார். அதே நேரத்தில் ஜீவானந்தம் போலீஸ் கஸ்டடியில் கூறிய விஷயம் என்னவென்றால் நான் தான் தர்ஷனிடம் ஆறுதலாக பேசி உன் லட்சியத்திற்காக நீ ஓடி விளையாடு என்று அனுப்பி வைத்தேன்.

ஆனால் இப்பொழுது அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் தான் கண்டுபிடிக்கணும் என்கிற மாதிரி பேசி வைத்திருந்தார். பிறகு ஆதிரை வீட்டில் இருப்பதை பார்த்ததும் குணசேகரன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். ஆனால் ஆதிரை குணசேகரனை பேச்சாளையே மடக்கி பேசி விட்டார்.

Also read: முத்துவின் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கொண்டாடும் மீனா.. வயித்தெரிச்சலில் கொந்தளிக்கும் விஜயா

இதை தாங்கிக் கொள்ள முடியாத குணசேகரன் ஆதிரையை அடிக்க கை ஓங்குகிறார். அந்த நேரத்தில் கதிர் தன் தங்கைக்காக அண்ணன் குணசேகரன் கையைப் பிடித்து அவரை அடக்கி விட்டார். இதை தான் உன்னிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்தோம் என்பதற்கு ஏற்ப தற்போது கதிருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இனிமேலும் அண்ணன் தங்கைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து குணசேகரனை எதிர்த்து நிற்கப் போகிறார்கள். ஆனாலும் கதிர் தனக்கு எதிராக மாறிவிட்டார் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத குணசேகரன் மொத்த கோபத்தையும் அந்த வீட்டில் உள்ள பெண்களிடம் காட்ட ஆரம்பித்து விட்டார். அதற்காக போலீஸிடம் போன் பண்ணி என் வீட்டில் உள்ள நான்கு பெண்கள் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. நீங்கள் அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி போலீஸ் தர்ஷினியை கண்டுபிடிப்பதற்கு பதிலாக ஜனனி, ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கிறார்கள். ஆனால் இவர்கள் ஜீவானந்தம் சொன்னதற்கு எதிர் மாறாக போலீஸிடம் தேவையில்லாமல் பேசி சொதப்பி விட்டார்கள். ஆக மொத்தத்தில் தர்ஷினியை கண்டுபிடிக்க கிட்ட நெருங்கியும் கை தவற விட்டார்கள்.

Also read: 100 நாட்களுக்குள் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த சன் டிவி சீரியல்.. நெருங்க முடியாமல் தவிக்கும் எதிர்நீச்சல்

Trending News