திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காதலியுடன் பொண்டாட்டியை மோத விட்டு வேடிக்கை காட்டும் குணசேகரன்.. வழக்கம்போல் வாய் சவடாலில் ஜனனி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது முன்மாதிரி கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் அடுத்தடுத்து குணசேகரன் என்ன ஒரு தில்லாலங்கடி பண்ண போகிறார், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கதை எப்படி நகரும் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது. அதில் ஈஸ்வரி வேலை பார்க்கும் கல்லூரிக்கு சென்று குணசேகரன் அனைவரது முன்னாடியும் அவமானப்படுத்தி விட்டார்.

இதனால் ஈஸ்வரியால் கல்லூரியில் வேலை பார்க்க முடியாமல் போய்விட்டது. அடுத்து இந்த சம்பவத்தால் வெறிகொண்டு வீட்டிற்கு வந்த ஜனனி வழக்கம்போல் குணசேகரனிடம் வாய்சவடால் விடுகிறார். அதாவது மிஸ்டர் குணசேகரன் நீங்க செஞ்ச காரியத்தால் இந்த வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுவோம் என்று மட்டும் நினைக்காதீர்கள். இனிமேல் தான் நாங்கள் வேகமாக செயல்படுவோம் என்று ஜனனி பேசிய பொழுது சும்மா இது வாயாலேயே வடை சுடுகிறார் என்பது போல தான் இருந்தது.

ஏனென்றால் இதே டயலாக்கை ஜனனி, குணசேகரனிடம் நூறு தடவையாவது சொல்லி இருப்பார். சொன்ன அவருக்கு போர் அடிக்கோ இல்லையோ, கேட்கிற நமக்கு அழுத்துப்போச்சு. அந்த வகையில் இந்த வீட்டு பெண்கள் இப்போதைக்கு குணசேகனை எதிர்த்து முன்னேற மாட்டார்கள் என்ற எண்ணமே தோன்றி விட்டது. அந்த அளவிற்கு கதைக்கு சம்பந்தமே இல்லாமல் மக்கள் எதிர்பார்ப்பதை கொண்டு வராமல் தேவையில்லாமல் கதையை சுற்றி வருகிறார்கள்.

Also read: பிரேம் டைமில் கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி சேனல்.. எதிர்நீச்சல் காலை வாரி விட்டாலும் கெத்தா இருக்கும் சீரியல்

இதற்கு அடுத்து குணசேகரன் வியாபார ரீதியாக எஸ்கேஆர் ஐ எப்படியாவது காலி பண்ண வேண்டும் என்று நினைக்கிறார். அந்த வகையில் வியாபார எலக்சன் வருகிறது. இதில் எஸ்கேஆர் க்கு பதிலாக மனைவி சாரு பாலாவை எலக்ஷனில் நிக்க வைத்திருக்கிறார். இதை குணசேகரன் கேள்விப்பட்டதும் எக்ஸ் காதலியான சாறு பாலாவை எதிர்த்து போட்டியிடுவதற்கு ஈஸ்வரியை நிற்க வைக்கப் போகிறார்.

அந்த வகையில் காதலியையும் பொண்டாட்டியையும் மோதவிட்டு குளிர் காயப் போகிறார் குணசேகரன். இப்படி இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வில்லத்தனமாகவும், மற்றவர்களை சொந்தமாக யோசிக்க முடியாத அளவிற்கு மட்டமான காரியத்தை செய்து வருகிறார். இதை எல்லாம் தவிர்த்து அப்பத்தா கண்ட கனவையும், இவர்கள் ஆசைப்பட்ட விஷயத்தையும் எப்படி தான் நிறைவேற்றப் போகிறார்களோ தெரியவில்லை.

இதற்கு இடையில் ஜான்சி ராணி வேற உள்ளே புகுந்து குணசேகரன் மூளையை சலவை செய்கிறார். ஒருவேளை சாரு பாலாவிற்கு எதிராக ஜான்சி ராணியை நிற்க வைப்பாரோ. எது எப்படியோ எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏற்ற கதை படி வீட்டில் அடங்கி இருக்கும் பெண்கள் வாடி வாசலை தாண்டி ஜெயித்தால் மட்டுமே இந்த நாடகத்துக்கு கூடிய சீக்கிரம் விமோசனம் கிடைக்கும்.

Also read: கோபி அங்கிளை வீட்டை விட்டு துரத்தும் பாக்யா.. பழனிச்சாமி முன் அசிங்கப்படும் எக்ஸ் புருஷன்

Trending News