திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மொத்தத்தையும் உருவி விட்ட ஜீவானந்தம்.. மானம் மரியாதையை இழந்து தள்ளாடும் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் குறை சொல்ல முடியாத ஒரு பெஸ்ட் சீரியல் ஆக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் குணசேகரனின் வில்லத்தனமான நடிப்பை இதுவரை கோபப்பட்டு பார்த்த மக்கள், தற்போது இவருடைய நிலைமை நினைத்து வருத்தப்படும் அளவிற்கு இருக்கிறது.

அதாவது தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வதற்கு ஏற்ப அந்த வீட்டில் உள்ள பெண்கள் குணசேகரனை என்னதான் வெறுத்து இருந்தாலும், தற்போது இவருடைய நிலைமை நினைத்து பரிதவித்து வருகிறார்கள். இதில் ஜனனி படித்து புத்திசாலித்தனமாக இருந்தாலும், சில விஷயங்களில் அவரால் ஒன்னும் பண்ண முடியாமல் வேடிக்கை மட்டும் பார்க்கும் நிலைமை இருக்கிறது.

Also read: எதிர்நீச்சல் சீரியலை பற்றி குணசேகரனிடம் பேசிய ரஜினிகாந்த்.. ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அடுத்தப்படியாக ஜீவானந்தம், குணசேகரனை எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அதை தரமாக பிரித்து மேய்ந்து செஞ்சி விட்டார். இதனால் அடுத்து என்ன பண்ண வேண்டும் என்று புரியாமல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போகிறார். ஆனால் இவர் போவதற்கு முன் ஜீவானந்தம் அங்கே சென்று குணசேகரன் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுகிறார்.

அதற்கு ஏற்ப எல்லா வீடியோக்களையும், ஆதாரங்களையும் ரெடி பண்ணி குணசேகரன் ஒன்னும் பண்ண முடியாத அளவிற்கு அங்கேயும் செக் வைத்து விடுகிறார். இதனால் மானம்,மரியாதை இழந்து நிற்கதியாக தள்ளாடி கொண்டு வெளியே வருகிறார். இப்படி எல்லாம் ஒரு மனுஷன் இருப்பாங்களா என்று யோசிக்கும் அளவிற்கு குணசேகரனிடம் இருந்து மொத்தத்தையும் உருவி விட்டார்.

Also read: பிழைப்புக்காக எதிர்நீச்சல் சீரியலை அண்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. இறுதிக்கட்டத்தால் எடுத்த முடிவு

தற்போது குணசேகரனிடம் வெறும் உசுரு மட்டும் தான் ஊசிலாடிக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும் ஜீவானந்தத்தின் அராஜகம் தொடரும். இவர் என்னதான் சமூக சேவை செய்தாலும் இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்து பண்ணி, அதில் ரவுடிசத்தை கொண்டு வந்து செய்வது பார்ப்பதற்கு எரிச்சல் ஊட்டுகிறது. இவரை விட குணசேகரன் எவ்வளவோ பரவாயில்லை என்று யோசிக்கும் அளவிற்கு ஜீவானந்தத்தின் அட்டூழியம் இருக்கிறது.

இதில் இவர் கூடவே இருந்து அல்ல கையாக சுற்றும் பர்கானா என்னமோ மனசுல நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாத்துக்கும் மறு உருவமாக இருப்பது போல் நினைப்பு. செய்வது கட்டப்பஞ்சாயத்து இதில் என்ன உங்களுக்கு கௌரவம். குணசேகரன் அடுத்து என்ன பண்ணப் போகிறார். மொத்த கோபத்தையும் குடும்பத்தின் மேல் திரும்பும். இதற்கு ஜனனி புத்திசாலித்தனமாக யோசித்து தீர்வு கண்டால் இன்னும் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

Also read: லாஜிக்கே இல்லாமல் சொதப்பலாக போகும் எதிர்நீச்சல்.. நேருக்கு நேராக மோதும் ஜீவானந்தம் குணசேகரன்

Trending News