ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

காதலனை வீட்டிற்கு கூட்டிட்டு வந்த குணசேகரனின் வாரிசு.. முள்ளை முள்ளால் எடுக்கும் ஜனனி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது சூடு பிடிக்கும் அளவிற்கு நாடகம் மிக சுவாரசியமாக அமைந்து வருகிறது. குணசேகரன் செய்யும் அட்டூழியத்தை அந்த வீட்டில் இருக்கும் நான்கு மருமகள்கள் அடக்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவர்களை விட கமுக்கமாக இருந்து காரியத்தை சாதித்து விட்டார் ஆதிரை.

இத்தனை நாளாக குணசேகரனை எதிர்த்து பேசாமல் அந்த வீட்டில் புள்ள பூச்சியாக இருந்தார் ஆதிரை. ஆனால் இனிமேலும் அப்படி இருக்க முடியாது தன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக குணசேகரன் செய்த அட்டூழியத்தை அனைவருக்கும் தெரியும் படி கிழித்து தொங்க விட்டுவிட்டார். அதுமட்டுமில்லாமல் தன் ஆசைப்பட்ட காதலனுடன் சேர வேண்டும் என்பதற்காக சாருபாலாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.

அந்த வகையில் சாருபாலாவும் கூடிய விரைவில் அருணுக்கும் ஆதிரைக்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஒருவழியாக ஆதிரை வாழ்க்கைக்கு விடிவு காலம் பிறந்து விட்டது. ஆனால் தற்போது ஈஸ்வரி மகள் தர்ஷினி வாழ்க்கையில் ஒரு இடி வந்து விழுந்துவிட்டது.

Also read: பாக்யாவின் மகனுக்கு விவாகரத்து நோட்டீசை அனுப்பிய மருமகள்.. வில்லனாக மாறிய அப்பா

அதாவது ஆதிரை எடுத்த முடிவின் காரணமாக கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி ரொம்பவே பாதிப்பு அடைந்து விட்டார்கள். அதனுடைய தாக்கமாக தற்கொலை செய்யப் போவதாக வீட்டில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதனால் குணசேகரன் அவர்களை சமாதானப்படுத்தி என்னுடைய மகள் தர்ஷினியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று கரிகாலனுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டார்.

இதனை கேள்விப்பட்ட தர்ஷினி ரொம்பவே நொறுங்கிப் போய்விட்டார். அடுத்ததாக ஜனனி மற்றும் ஈஸ்வரி இவரை சமாதானப்படுத்தி நாங்கள் இருக்கிறோம். உன் வாழ்க்கையில் நீ என்ன ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாயோ, அது கண்டிப்பாக நடக்கும் என நம்பிக்கை கொடுக்கிறார் ஈஸ்வரி. இதனைத் தொடர்ந்து குணசேகரன் வீட்டிற்கு ஒரு பையன் தர்ஷினியை தேடி வருகிறான்.

அவன் யாரென்று குணசேகரன் கேட்டதற்கு தர்ஷினி வந்து இவனை தான் நான் காதலிக்கிறேன் என்று சொல்லி குணசேகருக்கு அதிர்ச்சியை கொடுக்கிறார். உடனே குணசேகரன் இந்த வயசுலையே உனக்கு காதல் கேக்குதா என்று சொல்ல, அதற்கு ஜனனி இந்த வயசுல தானே அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணுகிறீர்கள் என்று குத்தி காட்டி பேசுகிறார். ஆக மொத்தத்தில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று ஜனனி ஒரு பிளான் பண்ணி இருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: தன்னோட பொண்ண பழிகாடாகும் குணசேகரன்.. எதிர்நீச்சல் போட தயாரான ஈஸ்வரி

Trending News