திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நந்தினியை மோப்பம் பிடித்து வந்த குணசேகரனின் விசுவாசி.. சக்தி ஜனனிக்கு ஒர்க் அவுட் ஆகும் கெமிஸ்ட்ரி

Ethirneechal Serial: அனைவரது கவனத்தையும் ஒரே நாடகத்தின் மூலம் திசை திருப்ப முடியும் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலால் மட்டுமே முடியும். இந்த நாடகத்தில் குணசேகரனை எதிர்த்து தனக்கான ஒரு அங்கீகாரத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்று போராடிவரும் மருமகள்கள் அனைவரும் அவர்களுக்கான திறமையை கண்டுபிடித்து விட்டார்கள்.

அந்த வகையில் நந்தினி, நேன்டி புட்ஸ் என்று கேண்டினை ஆரம்பித்து அதன் மூலம் வெற்றி பெற பிள்ளையார் சுழி போட போகிறார். அதற்கான வேலை தான் முதியோர் இல்லத்தில் இருக்கும் 50 பேருக்கு உணவை சமைத்து கொடுக்கப் போகிறார். வீட்டில் இருக்கும் குணசேகரன் மற்றும் தம்பிகளுக்கு தெரியாமல் வேலையை கச்சிதமாக செய்துவிட்டார்.

Also read: இனி அடுத்த எதிர்நீச்சல் குணசேகரன் இவர் தான்.. மாரிமுத்து சாயலில் இருப்பதால் திருச்செல்வம் எடுக்கும் முடிவு

அதை எடுத்துக்கொண்டு போகும்போது யாரு கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்று பார்த்து பக்குவமாக நந்தினி ஒவ்வொன்றையும் செய்கிறார். ஆனால் இதை சரியாக மோப்பம் பிடித்து ஏழரை கூட்டுகிறார் குணசேகரனின் விசுவாசியாக இருக்கும் கரிகாலன். ஆனால் அவரின் வீக்னஸ் பாயிண்டை புரிந்து காபியை கொடுத்து மேலே அனுப்பி வைக்கிறார்கள்.

அடுத்தபடியாக ஜனனி சாப்பாடு அனைத்தையும் கொண்டு போவதற்கு காரை கூட்டிட்டு வந்து விடுகிறார். அதில் அனைத்து சாப்பாடுகளையும் ஏற்றும்பொழுது கரிகாலன் மறுபடியும் வருகிறார். இவரின் கண்ணில் மண்ணை தூவிக்கொண்டு எப்படியும் சாப்பாடு சரியான நேரத்தில் போய் சேர்ந்து விடும்.

Also read: எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் அந்த வாழ்க்கைக்கு ஆசைப்படும் கடைக்குட்டி.. கொஞ்சம் ஓவராக போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

அதே நேரத்தில் ஈஸ்வரி, ரேணுகாவை தொடர்ந்து தற்போது தனக்கான முதல் படியை எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார் நந்தினி. இதற்கிடையில் சக்தி மற்றும் ஜனனி இதுவரை எந்த உறவுமுறையில் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் தற்போது ஜனனி அவரிடம் இருந்த மொத்த காதலையும் சக்திக்கு உரைக்கும் படி புரிய வைத்து விடுகிறார்.

அந்த வகையில் இவர்களுடைய ரொமான்ஸ் ஆரம்பித்து பார்க்கவே நன்றாக இருக்கிறது. இவர்களுடைய கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து, பிசினஸ்லையும் ஜெயிக்கப் போகிறார்கள். இதனை தொடர்ந்து குணசேகரன் வாழ்வில் ஒவ்வொரு அடியாக அடிபட்டு கொண்டே வரப்போகிறார்.

Also read: டிஆர்பிக்காக சன் டிவி செய்த மட்டமான வேலை.. குணசேகரன் கதாபாத்திரத்திற்காக போட்ட ஸ்கெட்ச்

Trending News