வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஜீவானந்தம் உன் புருஷனா இருந்தா நல்லா இருக்குன்னு சொன்னல.. கன்னத்தை பழுக்க வைத்த குணசேகரனின் பொண்டாட்டி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டர் இல்லாமலே கதையை விறுவிறுப்பாக நகர்த்துவதற்காக படாத பாடு பட்டு வருகிறார் இயக்குனர். அந்த வகையில் தற்போது இந்த நாடகத்தில் உள்ள அனைவரும் அவர்களால் முடிந்த அளவிற்கு முழு முயற்சியுடன் அவர்களுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் இதுவரை புள்ள பூச்சியாக இருந்த ஞானம் தற்போது தலையில் கொடுக்கு முளைத்தது போல் அனைவரையும் வார்த்தையாலே தாக்குகிறார். இவர் இந்த மாதிரி மாறியதும் கதிர் உட்கார்ந்து கைத்தட்டி சிரித்துக்கொண்டு ரசித்துப் பார்க்கிறார். இதை பார்க்கும் பொழுது ரொம்பவே கடுப்பாக இருக்கிறது என்று மக்கள் ஒரு பக்கம் புலம்பித் தவிக்கிறார்கள்.

Also read: ரமணா பட பாணியில் இறந்த குணசேகரனுக்கு உயிர் கொடுத்து வரும் எதிர்நீச்சல்.. கதிர், ஞானத்தை விட நல்லவரா?

அத்துடன் கதிர் நாளுக்கு நாள் அவருடைய எல்லையை மீறி கொண்டு போகிறார். கண்டிப்பாக எங்கேயோ செமத்தியா வாங்கப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த காட்சி தற்போது பிரமோவாக வெளியாகி இருக்கிறது. அதாவது தன்னுடைய அண்ணி என்று கூட பார்க்காமல் கதிர் வாய்க்கு வந்தபடி அனைவரையும் கேவலமாக பேசிக்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது எல்லை மீறும் அளவிற்கு ஈஸ்வரிடம், உன் பிள்ளைகள் ஜீவானந்தம் உனக்கு புருஷனாக இருந்தால் நல்லா இருக்குமே என்று பேச வைத்தது நீதானே என்று சொல்கிறார். அத்துடன் ஜீவானந்தத்தையும் ஈஸ்வரியையும் சேர்த்து வைத்து பேசி அரக்கன் போல் நடந்து கொள்கிறார். இதை சகித்துக் கொள்ள முடியாத குணசேகரனின் மனைவி,  கதிர் கண்ணம் பழுக்கிற அளவிற்கு பளார் என்று ஒரு அறையை விடுகிறார்.

Also read: குருநாதா இத்தனை நாளா எங்க போனீங்க.. குணசேகரனுக்கு பதிலாக சரவெடியாக வெடிக்க போகும் பட்டாசு நடிகர்

இதை பார்த்த அனைவரும் ஆனந்தத்தில் இப்படித்தான் இவனுக்கு வேணும் என்று கண்கொள்ளா காட்சியாக ரசிக்கிறார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் இந்த நாடகத்தை இதுவரை பார்த்து வந்த மக்களும் இப்பதான் எங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்குது என்று ஆனந்தப்பட்டு வருகிறார்கள். அத்துடன் இது மட்டும் இவனுக்கு போதாது இதுக்கு மேலயும் அடி விழனும் என்று சபித்து வருகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது கரிகாலன் உடைய பேச்சும் ரொம்பவே திமிராகவும் வன்மமாகவும் இருக்கிறது. இதனால் இந்த கரிகாலன் எங்களுக்கு தேவையே இல்லை என்று ஆதங்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவாக கூடிய விரைவில் குணசேகரன் வந்தால் மட்டுமே பார்ப்பவர்களின் சுவாரசியம் என்னும் அதிகரிக்க கூடும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also read: வெறுப்பை கக்கும் எதிர்நீச்சல் சீரியல், குணசேகரனை மிஞ்சும் கதிர்.. போற போக்கு பார்த்தா டம்மி ஆயிடும் போல

Trending News