புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜீவானந்தம் மீது பரிதாபப்பட்டு குணசேகரனுக்கு சங்கு ஊதிய ஆசை மனைவி.. எமனாக மாறிய ஈஸ்வரி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இல்லாமலேயே தற்போது கதையைக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கதிர், அண்ணன் ஆசைப்பட்ட மாதிரி வீட்டில் இருக்கும் பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமையாக்கி காட்டுவேன் என்று சபதத்துடன் வெறிபிடித்த வேட்டையனாக இருந்து வருகிறார். அடுத்து ஞானம் என்ன செய்வது என்று தெரியாமல் ரெண்டுங்கெட்ட முடிவில் உலாவி வருகிறார்.

இவர்கள் செய்யும் அட்டூழியத்தை விட ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டுக்குள் இருந்து நந்தினி மற்றும் ரேணுகாவை ரொம்பவே டார்ச்சர் செய்து வருகிறார். இதனால் இவர்களிடம் தற்போது சிக்கி கொண்டு தவித்து வருகிறார்கள் அந்த வீட்டில் உள்ள பெண்கள். ஆனால் ஜனனி மற்றும் அப்பத்தா இவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் போதாது என்று கொஞ்சம் சோர்ந்து போய்விட்டார்கள். இதனால் அப்பத்தா தற்போது அதிரடியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அதாவது இதுவரை குணசேகரன், அப்பத்தாவிடம் இருந்த 40% சொத்துக்கு தான் வாயை மூடிக்கொண்டு இருந்தார். எப்படியாவது இந்த சொத்தை கைப்பற்றி விட வேண்டும் என்று பல தில்லாலங்கடி வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் இதற்கு ஒரேடியாக முடிவு கட்ட வேண்டும் என்று அப்பத்தா இந்த சொத்துக்கள் அனைத்தையும் நல்வழியில் பயன்படுத்தப் போகிறார்.

அதற்கு ஒரு நிகழ்ச்சி வைத்து அவருடைய திட்டத்தை சொல்லப் போகிறார். இதற்கு தலைமை தாங்கும் பொறுப்பாக ஜீவானந்தம் வர இருக்கிறார் என்ற உண்மை அப்பத்தா குணசேகரன் வீட்டில் வைத்து போட்டு உடைக்கிறார். இதை கேட்ட கதிர் நீ ஆசைப்பட்ட மாதிரி என்ன வேண்டும் என்றாலும் பண்ணிக்கோ, நான் என்ன செய்யணுமோ அதை பண்ணுகிறேன் என்று பிளாக்மெயில் பண்ணுகிற மாதிரி பேசி விட்டார்.

இதை பார்த்து ஈஸ்வரிக்கு மிகப்பெரிய பயம் வந்துவிட்டது. அத்துடன் கதிர், ஞானத்திடம் ஜீவானந்தத்தின் கதையை முடித்து விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பதை ஈஸ்வரி கேட்டு விடுகிறார். இதனால் ஈஸ்வரி, ஜீவானந்தத்தை பார்த்து பேச போகிறார். அங்கே ஜீவானந்தத்திடம் நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று சொல்லி உங்களுடைய உயிர் ரொம்ப முக்கியமானது. அதுவும் வெண்பாவுக்கு நீங்கள் தற்போது முழு ஆதரவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஆனாலும் இதையெல்லாம் கேட்காமல் ஜீவானந்தம் எனக்கு சில கடமைகள் இருக்கிறது அதை நான் செய்தே ஆகவேண்டும் என்று சொல்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் ஈஸ்வரி சில உண்மையை போட்டு உடைக்கிறார். அதாவது ஜீவானந்திடம் உங்கள் மனைவி கயல்விழி இறப்பிற்கு காரணம் என்னுடைய புருஷன் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்று சொல்கிறார். இந்த உண்மை தெரிந்ததால் கதிருக்கு எமனாக ஜீவானந்தம் மாறப்போகிறார். ஆக மொத்தத்தில் அந்த திருவிழாவில் பெரிய சம்பவம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.

Trending News